கடைசியாக விக்ரமுக்கு எந்த படம் ஓடியது என்பதே தெரியவில்லை. அந்த லெவலுக்கு இவரது சினிமா கேரியர் தற்போது டல்ல்லடித்துள்ளது. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார் விக்ரம். அதற்குண்டான வேலைகளையும் பார்த்து வருகிறார்.
2010, 2011 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்து வந்த விக்ரமுக்கு தற்போது தொடர் தோல்விகள் மட்டும்தான் சொந்தமாக இருக்கிறது. ராவணன், தெய்வத்திருமகள் படங்களுக்கு பிறகு 12 படங்கள் நடித்தும் எதுவும் கை கொடுக்கவில்லை.
ராஜபாட்டை, டேவிட், 10 எண்றதுக்குள்ள, சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான்,கோப்ரா, மஹான் என அடுத்தடுத்து தொடர் தோல்விகள். பொன்னியின் செல்வன் படம் மட்டும் ஓரளவு கை கொடுத்தது அதுவும் அவர் சோலோ ஹீரோவாக நடிக்கவில்லை. தங்களான் படமும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.
தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரின் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளாகி கிடப்பில் கிடக்கிறது. அந்தப் படத்தை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனனும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.
அடுத்து விக்ரம் மற்றும் மெடோன் அஸ்வின் கூட்டணியில் ஒரு படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. அந்த படமும் சரியாக வியாபாரமாகவில்லை. அதை ஒரு பெரும் தொகைக்கு விற்று விடலாம் என எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால் பிரபல ஓட்டிடி நிறுவனங்கள் அனைத்தும் விக்ரமின் கடைசி ஹிட் படத்தை கேட்டு இவ்வளவு தொகை கொடுக்க முடியாத என்கிறார்கள். இவ்வளவு இருந்தும் இந்த படத்திற்கு விக்ரமுக்கு 50 கோடிகள் சம்பளமாக கொடுத்துள்ளார்கள்