செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

நாசுக்கா கழட்டிவிட்ட பெரிய ஹீரோக்கள்.. இல்லத்தரசிய திரும்பி கூட பார்க்காத விஜய் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நல்ல அழகு, திறமை இருக்கும் ஹீரோயின்களை கல்யாணத்துக்கு பிறகு அப்படியே மறந்து விடுவது தான். அப்படி சமீபத்தில் திருமணம் நடைபெற்ற ஒரு நடிகையை பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என யாரும் பார்ப்பது கூட இல்லையாம்.

விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு எதிராக டான்ஸ், நடிப்பு என அனைத்து திறமைகளையும் காட்டி ஒரு ரவுண்டு வந்தவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தில் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

ரஜினி முருகன், ரெமோ, தொடரி என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உடன் கூட்டணி போட்டார். தமிழ் சினிமாவின் அடுத்த மீனா என்ற பெருமையை தன்வசமாக்கினார். ஒன்பது வருடங்களாக மார்க்கெட் இறங்காமல் சுற்றி வந்த இவருக்கு இப்பொழுது கஷ்டகாலம்.

2024 டிசம்பர் மாதம் தனது 15 வருட கால நண்பனை திருமணம் செய்தார் கீர்த்தி சுரேஷ். அவர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபர். இருந்தாலும் நடிப்பதை விட மாட்டேன் என கூறிவந்த அவரை தமிழ் சினிமாவே தற்போது ஓரங்கட்டி வருகிறது. பெரிய ஹீரோக்களும் அவரை சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டனர்.

கல்யாணத்துக்கு பிறகு அவர் கையில் எந்த படங்களும் இல்லை. ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களும் கைநழுவி போகிறதாம். இவர் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி என இரண்டு படங்கள் வெளிவர இருக்கிறது அதுவும் கல்யாணத்துக்கு முன்னரே நடித்து முடித்தது. ஒரே ஒரு படம் மட்டும் தான் கையில் வைத்திருக்கிறார். விஜய், சிவகார்த்திகேயன் என ஜோடி போட்டவர் இப்பொழுது அசோக் செல்வனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

Trending News