Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஹாஸ்பிடலில் இருந்து மனோஜை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். வந்ததும் விஜயா, மீனாவை கூப்பிட்டு மனோஜ்க்கு ஆரத்தி எடுக்க சொல்கிறார். மீனாவும் எடுக்க வந்த நிலையில் விஜயா, மீனாவை உதாசீனப்படுத்திவிட்டு விஜயா ஆரத்தி எடுத்து மீனாவை அவமானப்படுத்துகிறார்.
மீனாவுக்கு தினமும் அவமானப்பட்டு பழகி போய்விட்டது. அத்துடன் அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் மீனா இப்படித்தான் ஒரு வேலைக்காரி போல் இருப்பாள் என்பது புரிந்து விட்டது. அதனால் அவர்களும் விஜயா, மீனாவை அவமானப்படுத்தும் பொழுது பெருசாக ரியாக்ஷன் கொடுக்காமல் போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட மீனா இருக்கும் வரை விஜயா தொடர்ந்து ஆடிக்கொண்டே தான் இருப்பார்.
அடுத்ததாக குடும்பத்தில் அனைவரும் இருக்கும் பொழுது முத்து ஹாஸ்பிடல் மனோஜுக்காக செலவு செய்ததை பில்லோடு எடுத்து அண்ணாமலை இடம் கொடுத்து மனோஜிடமிருந்து பணத்தை வாங்க சொல்கிறார். உடனே மனோஜ் இவ்ளோ பணம் நான் எதற்கு கொடுக்க வேண்டும். யாரை கேட்டு இவன் செலவு செய்தான் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
அதற்கு முத்து, நீ அந்த கதிரை தேடிட்டு போகும் பொழுது ரோட்டில் இருப்பவர்களை தள்ளிவிட்டு விபத்து ஏற்பட்டதனால் அவர்கள் ஹாஸ்பிடலுக்கு வந்து பிரச்சினை பண்ணி பணத்தை வாங்கிட்டு போய் விட்டார்கள். அத்துடன் நீ ஹாஸ்பிடலில் சேர்ந்ததிலிருந்து டிஸ்சார்ஜ் பண்ணும் வரை எல்லா செலவுகளுக்கும் நான் தான் பணம் கட்டிஇருக்கிறேன் என்று சொல்கிறார்.
உடனே ரோகிணி உங்களை யாரு கட்ட சொன்னா நீங்க என்னிடம் வந்து கேட்டிருக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு மீனா நீங்களே உங்க புருஷனுக்கு அடிபட்டது நினைத்து கவலையில் அழுது கொண்டிருக்கும் பொழுது எப்படி எங்களால் உங்களிடம் வந்து கேட்க முடியும். எங்களுக்கு மனசாட்சி இருக்கிறது அப்படி எல்லாம் நாங்கள் பண்ண மாட்டோம். இப்பொழுது உங்களிடம் கேட்டது எங்களுடைய பணமாக இருந்தால் உங்களிடம் திருப்பி கேட்டிருக்க மாட்டோம்.
ஆனால் நாங்கள் எங்களுடைய நண்பர்களிடமிருந்து வாங்கி கட்டின பணம் என்பதால் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் கேட்டோம் என்று மீனா சொல்கிறார். முத்து மீனா பணத்தை கேட்பார்கள் என்று மனோஜ் ரோகினி கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவில்லை. இந்த பணத்தை கொடுப்பதற்கு மனோஜ்க்கு மனசே வரவில்லை. இருந்தாலும் அண்ணாமலை மற்றும் அனைவரும் சொல்லியதால் மனோஜ் சரி என்று சொல்லிவிடுகிறார்.
கஞ்சத்தனமாக இருக்கும் மனோஜ்க்கு மீனா மற்றும் முத்து பணத்தை கேட்டு ஆப்பு வைத்து விட்டார்கள். இதற்கிடையில் ஸ்ருதி, ரவி வேலை பார்க்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஸ்ருதியின் அம்மாவும் வந்து ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். உங்க மாமியார் வீட்டில் காசு இல்லை என்றால் நீ இப்படி வேலை பார்த்து தான் அதை கொடுக்கணுமா என்று ரவி முன்னாடி சுருதியை திட்டி விட்டுப் போகிறார்.
அதோடு நிறுத்தாமல் முத்துவின் வீட்டிற்கும் வந்து என் பொண்ணு வேலைக்கு போகாமல் இருக்க வேண்டும். அதற்கு நான் எம்டி செக்கு தருகிறேன். எவ்வளவு பணம் உங்களுக்கு தேவையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக சொல்கிறார். உடனே முத்துவும் அந்த செக்கை வாங்கி 50 கோடி வரை ஃபில் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்ருதியின் அம்மாவுக்கு அடிவயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது.
சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லி இதன் மூலம் குடும்பத்தில் ஒரு சண்டை இழுக்கலாம் என்று சகுனி வேலை பார்க்க வந்த ரவி மாமியாவிற்கு முத்து அதிரடியாக செக் வைத்ததன் மூலம் அப்படியே ஆடிப் போய்விட்டார். முத்து மத்தவங்க விஷயத்தில் எல்லாத்திலேயும் மூக்கு நுழைத்ததால் என்னமோ மீனா விஷயத்தை கண்டு கொள்ளாமல் ஒரு வேலைக்காரியாக நடத்துவதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரோகிணி பற்றிய விஷயங்களையும் கண்டுபிடிக்காமல் மக்காக இருக்கிறார்.