செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2025

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் 9 படங்கள்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்

This Week Theater Release: இந்த வாரம் மார்ச் 7ஆம் தேதி 9 படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இவை அனைத்துமே ஒவ்வொரு வெரைட்டியான ரகங்களில் இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்படி ஜிவி பிரகாஷ், திவ்ய பாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படம் கடலில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தியதாகும்.

இதை அடுத்து யூடியூபர் நரேந்திர பிரசாத் நடித்துள்ள எமகாதகி படமும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. அடுத்து ஷாம் ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு நடித்து இருக்கும் அஸ்திரம் படமும் மார்ச் 7-ஐ குறி வைத்துள்ளது.

தியேட்டரில் ரிலீஸாகும் 9 படங்கள்

மேலும் பாரதிராஜா, நட்ராஜ், ரியோ, சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் நிறம் மாறும் உலகில், காமெடி நடிகர் ஸ்ரீநாத் நடித்துள்ள லெக் பீஸ் ஆகிய படங்களும் வெள்ளிக்கிழமை வருகிறது.

அதை அடுத்து விமல், சூரி நடிப்பில் கிடப்பில் கிடந்த படவா மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து திரில்லர் மற்றும் திகில் படமான மர்மர் இந்த வாரம் வெளியாகிறது.

மேலும் சமீப காலமாக வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் லிஜோ மோல் நடித்திருக்கும் ஜென்டில் உமன் படமும் இந்த வார ரேஸில் இறங்கியுள்ளது.

இறுதியாக ரோபோ சங்கர் நாயகனாக நடித்திருக்கும் அம்பி படமும் இந்த பட்டியலில் உள்ளது. இப்படியாக இந்த வாரம் 9 படங்கள் தியேட்டருக்கு வருகிறது. இதில் ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என பார்ப்போம்.

Trending News