Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை பற்றி தெரிந்து கொண்ட மகேஷ் முழுமையாக அவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டான்.
அதே நேரத்தில் அன்புவின் அம்மா இனியும் நீங்கள் அந்த கம்பெனியில் வேலை செய்ய வேண்டாம் என்று ஒரே அடியாக சொல்லிவிட்டார்.
ஆனால் அன்பு ஆனந்தியின் அக்கா திருமணத்திற்கு பணம் தேவை படுவதை காரணம் காட்டி இருவரும் மீண்டும் கம்பெனிக்கு போக திட்டமிடுகிறார்கள்.
அன்பு-ஆனந்திக்கு முழு ஆதரவு கொடுக்கும் தில்லைநாதன்
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி ஹாஸ்டல் வாட்ச்மேனிடம் மகேஷ் இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கும் போது நானும், அன்புவும் அவருடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு போகிறாள்.
ஆனந்தி மற்றும் அன்பு இருவரையும் கம்பெனியில் பார்த்ததும் மித்ராவுக்கு பயங்கரமான கோபம் வருகிறது. உடனே பார்வதிக்கு போன் பண்ணி போட்டு கொடுக்கிறாள்.
உடனே பார்வதி நான் இப்போவே கம்பெனிக்கு வந்து அவங்க 2 பேரையும் வெளியே அனுப்புகிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் தில்லைநாதன் பார்வதியின் திட்டத்திற்கு உடன்படுவதாய் இல்லை. அன்பு மற்றும் ஆனந்தி 2 பேரும் இந்த கம்பெனியில் தான் வேலை செய்வார்கள் என்று சொல்கிறார்.
இது மகேசுக்கு பெரிய கோபத்தை உண்டு பண்ணுகிறது. ரூமுக்கு வந்து கதறி அழும் மகேஷை மித்ரா கட்டிப்பிடித்து சமாதானம் பண்ணுகிறாள்.
ஆனந்தியை முழுக்க வெறுக்கும் மகேஷ் மித்ராவின் காதல் வலையில் விழுகிறானா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.