Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா, கயாடு லோஹர் ஆகியோர் நடித்திருந்த டிராகன் கடந்த மாதம் வெளிவந்தது.
ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்திற்காக முதல் நாளே பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதை அடுத்து வந்த நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் கலை கட்டியது.
இப்படத்துடன் வெளியான தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் டிராகன் அதை ஓரம் கட்டி வசூலிலும் கெத்துக் காட்டி இருக்கிறது.
100 கோடி வசூலில் கெத்து காட்டிய டிராகன்
அதன்படி தற்போது இப்படம் 100 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இந்த வெற்றியை பட குழுவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் டிராகன் எப்போது டிஜிட்டலுக்கு வரப்போகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி இந்த வாரம் விடாமுயற்சி குடும்பஸ்தன் என ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் ஓடிடிக்கு வந்துள்ளது.
அந்த வகையில் டிராகன் வரும் மார்ச் 21ஆம் தேதி நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும்.