Memes: இன்று காலையிலேயே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சரியான கன்டென்ட் கிடைத்துவிட்டது. தானாக வந்து வலையில் சிக்கி இருக்கிறார் நயன்தாரா.

யாரும் என்னை இனி லேடி சூப்பர்ஸ்டார் என கூப்பிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது போதாதா நெட்டிசன்கள் அவரை வாமா ராசாத்தி என கலாய்த்து வருகின்றனர்.

உங்கள யாரும் அப்படி கூப்பிடல, இருக்கிற பிரச்சனை இல்ல இது வேற, இன்னும் இப்படி சீன் போடறத நிறுத்தலையா என சரமாரியாக வறுத்து எடுத்து வருகின்றனர்.

அதேபோல் யாரு உங்கள லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிட்டா, நான் என் புருஷன் ரெண்டு புள்ளைங்க என மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

மேலும் இதுக்கெல்லாம் விதை போட்டது அஜித். காலங்காத்தால நீ வேற வந்து உசுர வாங்குறியே, போம்மா அங்கிட்டு என அலப்பறை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே என்ன கன்டென்ட் கிடைக்கும் வச்சி செய்யலாம் என காத்திருந்த நெட்டிசன்களுக்கு நயன்தாரா ரூட் போட்டு கொடுத்து விட்டார். அப்படி லேடி சூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.


