வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

மீனாவின் பிசினஸை கெடுக்க சதி பண்ணும் விஜயாவின் கூட்டணி.. கல்யாணத்தில் கிழிய போகும் ரோகிணியின் முகமூடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி ஹோட்டலில் சுருதி சப்ளையராக வேலை பார்ப்பதால் கோபமான ஸ்ருதி அம்மா, விஜயா வீட்டுக்கு வந்து அவமானப்படுத்தி செக்கை கையில் கொடுத்து உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசினார். அந்த வகையில் ஸ்ருதியின் அம்மா திமிரை அடக்கும் விதமாக முத்து அந்த செக்கை வாங்கி 50 கோடி வரை எழுதிவிட்டார்.

இதனால் வயிற்றில் புளி கரைத்த சுருதி அம்மாவுக்கு முத்துவிடமிருந்து செக்கை திரும்ப வாங்கி விட்டார். உடனே முத்து நீங்க தானே எவ்வளவு வேணாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னீங்க. இப்ப என்ன செக்கை திரும்ப வாங்குறீங்க என்று அவமானப்படுத்தி விட்டார். இதை சமாளித்த சுருதி அம்மா, விஜயாவிடம் என் மகள் வேலைக்கு போகக்கூடாது. அது எனக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கிறது.

அதற்காக ரவிக்கு நாங்கள் சொந்தமாக ரெஸ்டாரண்ட் வைப்பதற்காக உதவி பண்ணுகிறோம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் விஜயா முகத்தில் அவ்ளோ சந்தோஷம் வந்து விட்டது. ஆனால் முத்து மற்றும் அண்ணாமலை இதை நீங்க உங்க மகள் மற்றும் மருமகனிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு ரவி சுருதி வந்ததும் விஜயா, ஸ்ருதி அம்மா வந்து பேசின விஷயத்தை சொல்கிறார்.

அப்பொழுது முத்துவும் சேர்ந்து சுருதி அம்மா எம்டி செக்கு கொடுத்து அவமானப்படுத்தினார். அதனால் நானும் பதிலடி கொடுத்தேன் என்று சொல்கிறார். உடனே ரவி, சுருதியிடம் சண்டை போடுகிறார். உங்க அம்மாக்கு ஏன் தேவையில்லாத வேலை இப்படித்தான் ஹோட்டலில் வந்து சண்டை போட்டாங்க. இப்பொழுது வீட்டுக்கே வந்து இப்படி பண்றாங்க, என்ன நினைச்சுட்டு இருக்காங்க என்று சுருதியிடம் கோபமாக பேசுகிறார்.

அதற்கு ஸ்ருதி நான் என்ன பண்ணினேன் அவங்க ஏதாவது சொன்னாங்கன்னா நீ அவங்க கிட்ட தான் போய் கேக்கணும் என்று சொல்கிறார். அந்த சமயத்தில் மனோஜ், உன்னுடைய மாமியார் உனக்கு ரெஸ்டாரன்ட் வைப்பதற்கு பணம் ஏற்பாடு பண்ணி தருவதாக சொல்கிறார். இது நல்லது தானே நீ அவங்க சொன்னபடி கேட்டால் நீ சொந்தமாக ரெஸ்டாரண்ட் வைத்து ஓனராக மாறிவிடலாம் என கூறுகிறார்.

இதை கேட்டதும் சுருதியும், இது நல்ல ஐடியாவாக இருக்கிறது. உனக்கு ஹோட்டல் பற்றி நல்லா தெரியும் உன்னிடம் திறமையும் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் நீ தனியாக ஆரம்பிக்க கூடாது என்று சொல்கிறார். அதற்கு ரவி எது இருந்தாலும் என்னுடைய சொந்த சம்பாதித்தில் நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். உங்க அப்பா அம்மா கொடுத்த பணம் எனக்கு தேவையில்லை என்று கரராக சொல்கிறார்.

அப்பொழுது சுருதி என்னுடைய அப்பா அம்மா பணம் எனக்கு தானே வந்து சேரும். என்னுடைய பணம் என்றால் அது உனக்கும் தானே என்று சொல்கிறார். ஆனால் ரவி முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதனை எடுத்து மீனாவுக்கு புதுசாக ஒரு பிசினஸ் ஆர்டர் வந்திருக்கிறது. இந்த ஆர்டர் மூலம் 50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்ற சந்தோசத்தில் முத்துவிடம் சொல்கிறார்.

இதனால் வருத்தம் அடைந்த விஜயாவிற்கு சிந்தாமணி போன் பண்ணி மீனா எடுக்க போகும் ஆர்டர் இதுதான் கடைசியாக இருக்கப்போகிறது. இந்த ஆர்டர் கிடைப்பதற்கு நான் தான் காரணம், இதுவே கடைசியாகவும் இருக்கும் என்று மீனாவின் பிசினஸ்க்கு ஆப்பு வைக்கும் விதமாக சிந்தாமணி மற்றும் விஜயா சேர்ந்து கூட்டணி போட்டு விட்டார்கள். ஆனால் நிச்சயம் மீனா இந்த பிரச்சனை எல்லாம் சமாளித்து வெற்றி பெறுவார்.

அடுத்ததாக பரசுராமனின் மகள் கல்யாண விஷயத்தில் முத்து மீனா அனைவரும் சேர்ந்து பிளான் போடுகிறார்கள். இதில் கசாப்பு கடை மணியும் மும்மரமாக இருப்பதால் இந்த திருமணத்தின் மூலம் ரோகிணியின் உண்மையான முகமூடி எல்லாம் கிழியப்போகிறது. அதாவது மலேசியா பொண்ணுமில்லை பணக்கார வீட்டு பொண்ணும் இல்லை என்ற ரகசியம் இந்த திருமணத்தில் வெளிவரப் போகிறது.

Trending News