Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் அனைத்துமே மக்களின் பேவரைட் சீரியலாக தான் இடம்பெற்று வருகிறது. அதிலும் சில சீரியல்கள் ஒரு நாள் கூட மிஸ் பண்ணாமல் தொடர்ந்து பார்த்து அதில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களுக்கு அதிக அளவில் வரவேற்பு கொடுத்து அவர்களை தூக்கி கொண்டாடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் இருந்து அதிரடியான கதைகளுடன் விறுவிறுப்பான காட்சிகள் ஒவ்வொன்றாக நடைபெற போகிறது. இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் டிமிக்கி கொடுத்த இனியா, யாருக்கும் தெரியாமல் காதலிக்க ஆரம்பித்து விட்டார். அப்படி இனிய காதலிக்கும் நபர் யார் என்றால் பாக்யா வீட்டில் பல வருஷமாக வேலை பார்த்து வரும் செல்வி அக்காவின் மகன் ஆகாஷை தான்.
இந்த விஷயம் யாருக்கும் தெரியாத பட்சத்தில் தற்போது கோபி அனைத்தையும் கண்டுபிடித்து விட்டார். கண்டுபிடித்தது மட்டுமில்லாமல் வீட்டுக்கு வந்து பாக்கியாவிடம் ஆதாரத்துடன் நிரூபித்து விட்டார். முக்கியமாக இனிய காதலிப்பது இந்த வீட்டை கூட்டி பெருக்கி பாத்திரம் கழுவுறாலே செல்வி, அவளுடைய பையன் ஆகாஷை தான் நம்ம வீட்டு பொண்ணு இனிய காதலிக்கிறாள் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நின்ற பொழுது எதுவும் தெரியாத செல்வி அக்கா வீட்டுக்குள் வழக்கம் போல் வருகிறார். அப்பொழுது ஈஸ்வரி, நல்லவள் மாதிரி வீட்டுக்குள் வந்தது இதற்குத்தானா என்று கேட்கிறார். ஆனால் எதுவும் புரியாத செல்வி அக்கா, எனக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று சத்தியமாக புரியவில்லை என கூறுகிறார்.
உடனே செழியன், என்ன தைரியம் இருந்தால் என் தங்கச்சியுடன் உங்க பையன் பழகுவான் என்று கேள்வி கேட்கிறார். அத்துடன் ஈஸ்வரியும் இனி இந்த வீட்டுக்குள் நீ வரக்கூடாது என்று சொல்லி ஈஸ்வரியை வெளியே அனுப்பி விடுகிறார். ஆனால் இவ்வளவு நடந்தும் பாக்கிய வாய மூடிக் கொண்டு எதுவும் சொல்லாமல் நிற்கிறார். ஆனால் பாவம் இனிய செய்த தவறுக்கு செல்வி என்ன செய்ய முடியும்.
அடுத்ததாக மகாநதி சீரியலில் காவிரியின் தங்கை நர்மதாவுக்கு ஸ்கூலில் ஒரு ப்ராஜெக்ட் பண்ண வேண்டும் என்று பொருட்கள் வேண்டும் என இரவு நேரத்தில் கேட்கிறார். ஆனால் சாரதா இந்த நேரத்தில் ஒன்னும் வாங்க முடியாது பேசாமல் தூங்கு என்று சொல்லி தூங்க வைக்கிறார். ஆனால் என்ன பொருள் வேணும் என்று நர்மதாவிடம் கேட்டுக்கொண்ட விஜய், எல்லா பொருட்களையும் வாங்கி நர்மதா செய்ய வேண்டிய ப்ராஜெக்ட்டையும் வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். அந்த வகையில் காவிரி குடும்பத்திற்கு எல்லா விதமாக விஜய் உறுதுணையாக இருந்து உதவி செய்கிறார்.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியை சினிமாவிற்கு போகலாமா என்று குமரவேலு கூப்பிடுகிறார். ஆனால் அரசி வேண்டாம் என்று சொல்லிய நிலையில் சுகன்யாவை வைத்து குமரவேலு நினைத்ததை சாதிக்கிறார். அந்த வகையில் சுகன்யா, குமரவேலுடன் சினிமாவுக்கு போனா தப்பு எதுவும் இல்லை நானும் என உன்கூட வரேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி குமரவேலுடன் அரசியை சுகன்யாவை அனுப்பி வைக்கப் போகிறார். ஆனால் இவர்கள் பேசுவதே கேட்காவிட்டாலும் மீனாவுக்கு சின்ன சந்தேகம் வந்துவிட்டது. பாண்டியன் குடும்பத்தை இரண்டு ஆக்காமல் இந்த சுகன்யா ஓயமாட்டார். இதில் பலியாடாக அரசி சிக்கிக்கொண்டார்.