வியாழக்கிழமை, மார்ச் 6, 2025

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.. ஹிப் ஹாப் ஆதியை கெட்டியாக பிடிக்கும் சுந்தர் சி

Sundar C: சுந்தர் சி மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் காம்போ தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று சுந்தர் சி-யின் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார்.

சுந்தர் சி யின் ஆம்பள படத்தில் இவர்களது காம்போ தொடங்கியது. இதைத்தொடர்ந்து கலகலப்பு 2, அரண்மனை 2 மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் இந்த கூட்டணி அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை அரண்மனை 4 படம் கொடுத்திருந்தது.

ஒரு இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் என்ற நிலையைக் கடந்து ஒரு அண்ணன் தம்பி போல் இவர்கள் இருவரும் சினிமாவில் இருந்து வருகிறார்கள். மேலும் ஹிப் ஹாப் ஆதிக்காக நான் சிரித்தால், மீசைய முறுக்கு போன்ற படங்களை சுந்தர் சி தயாரித்திருந்தார்.

ஹிப் ஹாப் ஆதியை கூடவே வைத்திருக்கும் சுந்தர் சி

மேலும் ஹிப் ஹாப் ஆதியை சினிமாவுக்கு சுந்தர் சி கொண்டு வந்ததால் ஒரு நன்றி கடனுடன் இருந்து வருகிறார். இந்த சூழலில் பான் இந்திய படமாக மூக்குத்தி அம்மன் 2 படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.

சுந்தர் சி யின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாகவும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாகவும் இப்படம் உள்ளது. இதில் நயன்தாரா, ரெஜினா, யோகி பாபு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதிலும் ஹிப் ஹாப் ஆதி மீது நம்பிக்கை வைத்து சுந்தர் சி இப்படத்தை கொடுத்திருக்கிறார்.

கண்டிப்பாக சுந்தர் சிக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கும் பிரம்மாண்ட இசை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த கூட்டணி தொடர்ந்து பல படங்களில் பயணிக்க இருக்கிறது.

Trending News