Memes: மார்ச் மாதம் தொடங்கி ஆறு நாட்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு மாதங்கள் எப்படி போனதுன்னே பல பேருக்கு ஆச்சரியம் தான்.

அந்த அளவுக்கு 2025 தொடக்கம் படு வேகமாக இருக்கிறது. அதிலும் இந்த வருடம் வெயில் இப்போதே வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது.

பிப்ரவரி மாதம் தொடங்கியதுமே சூரிய பகவான் ஒரு ஃபார்முக்கு வந்து விட்டார். அதில் ஏப்ரல் மாதமே இன்னும் தொடங்கல.

ஆனால் அதுக்குள்ளயே அனல் காத்து தீயாக சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டவே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

இப்படியே போனால் அக்னி நட்சத்திரம் இந்த முறை ரொம்பவும் உக்கிரமாக இருக்கும் என தெரிகிறது. சாம்பிள் காட்டுனதுக்கே சாம்பல் ஆயிடுவோம் போல இருக்கு.

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். தை பொறந்தா வழி பொறக்குதோ இல்லையோ வெயில் பொறந்திருச்சு.

மார்ச் மாசம் தான் நடந்துகிட்டு இருக்கு. அதுக்குள்ளேயே இப்படி ஒரு உஷ்ணமா இருக்கு கொஞ்சம் பொறும சாமி.
இன்னும் ஏப்ரல் மாதத்திற்கு நாள் இருக்கு என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.