வெள்ளிக்கிழமை, மார்ச் 7, 2025

பெண்மையை பெருமைப்படுத்திய 5 படங்கள்.. பெண்கள் தினத்தில் மறக்காம பாருங்க!

Women’s Day 2025: பெண்ணின் பெருமையை பேசும்படி தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி இருக்கிறது. வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கண்டிப்பாக இந்த ஐந்து படங்களை கண்டு மகிழலாம்.

மகளிர் மட்டும்
1994 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான மகளிர் மட்டும் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ரேவதி, ஊர்வசி மற்றும் ரோகினி ஆகியோர் துணிச்சலாக பல பிரச்சனைகளை எதிர்கொள்வது பிரமிக்க வைத்தது.

இதே டைட்டிலில் 2017 ஆம் ஆண்டு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்பிரியா மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிப்பில் மகளிர் மட்டும் படம் வெளியானது. இந்த படமும் பெண்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

அறம்
நயன்தாராவின் துணிச்சலான நடிப்பில் வெளியான படம் தான் அறம். ஒரு அதுல பாதாளத்தில் மாட்டியிருக்கும் குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நயன்தாரா நடித்திருந்தார். பல அரசியல் நெருக்கடியில் இருந்து அந்த குழந்தையை எப்படி காப்பாற்றினார் என்பது தான் அறம்.

அருவி
ஒரு பெண் இந்த சமூகத்தில் எவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை அருவி படம் காட்டியிருந்தது. எந்த தப்பும் செய்யாமல் ஆட்கொள்ளும் நோயால் பாதிக்கப்பட்டும் பெண் தனக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசி இருக்கும் படம் அருவி. இதில் அதிதிபாலன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்து இருந்தார்.

கார்கி
தந்தையே ஆனாலும் தப்பு செய்தவர் என்றால் ஒரு பெண் அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பார் என்பதை வெளிப்படுத்தும் படம் தான் கார்கி. தந்தை ஒரு குழந்தையை வன்புணர்வு செய்த நிலையில் அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அற்புதமாக நடித்திருந்தார்.

காற்றின் மொழி
இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தனக்கு பிடித்த வேலையை செய்ய எவ்வளவு பிரச்சனைகள் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டிய படம் தான் காற்றின் மொழி. இதில் ஜோதிகா ஒரு எதார்த்தமான பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார்.

Trending News