Nayanthara: நடிகை நயன்தாராவால் அவருடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் படாத பாடு படுகிறார் போல. ஏதாவது தப்பு செய்து அதற்காக ஒரு நாலு பேர் கிண்டல் பண்ணினால் கூட ஒத்துக் கொள்ளலாம்.
சிவனே என்று சும்மா இருக்கும்போது கூட வச்சு செய்வார்கள் என்றால் அது விக்னேஷ் சிவனுக்கு தான் நடக்கும். நயன்தாரா டாக்குமென்டரி வீடியோ வெளியான கையோடு விக்னேஷ் சிவனே ரவுண்டு கட்ட ஆரம்பித்து விட்டார்கள் நெட்டிசன்கள்.
யார் போனால் என்ன நான் இருப்பேன் என்று பாட்டு எழுதிய விக்கி அது எல்லாம் சினிமாவுக்கு தான் ஒத்துவரும் என்று நிரூபித்து விட்டார்.
விக்கி-நயனுக்கு இப்போ என்ன ஆச்சு?.
நயன்தாரா ஏர்போர்ட்டுக்கு போனாலும் சரி ஏரோபிளேனில் போனாலும் சரி விக்னேஷ் சிவன் கூட இருப்பார். ஆனால் நேற்று மூக்குத்தி அம்மன் பட பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
ஆனால் காதல் மனைவி நயன்தாராவின் படமாக இருந்தும் விக்னேஷ் சிவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
தேவையில்லாமல் நயன்தாராவுடன் கலந்து கொண்டு அது ஒரு சம்பவம் ஆகி படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வேண்டாம் என்று விக்கி நினைத்து விட்டார் போல.