லாரன்ஸ் லைன் அப்பில் இருக்கும் 3 படங்கள்.. மாஸ் காட்ட வரும் காஞ்சனா 4

Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பங்கு கொண்டபோது அவரது அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் பற்றி லாரன்ஸ் பேசி உள்ளார்.

லாரன்ஸ் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது பேய் படங்கள் தான். அதிலும் அவரது காஞ்சனா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இப்போது இந்த படத்தின் நான்காம் பாகம் உருவாகி வருகிறது.

லாரன்ஸே இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் காஞ்சனா 4 ரசிகர்களை திகில் அடையச் செய்ய விரைவில் வர உள்ளது. அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பென்ஸ் படத்திலும் லாரன்ஸ் நடித்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் கைவசம் இருக்கும் படங்கள்

பென்ஸ் படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். இந்த கதையும் எல்சியூ வில் வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ராகவா லாரன்ஸின் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்ததாக லாரன்ஸ் நடிக்கும் படம் தான் கால பைரவா. இந்த படத்தை ரமேஷ் வர்மா இயக்குகிறார். இவ்வாறு லாரன்ஸுக்கு‌ அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் சம்பாதிக்கும் தொகையை தனது தொண்டு நிறுவனத்திற்கு செலவழித்து வருகிறார்.

இதனால் மற்றவர்கள் இந்த தொண்டு நிறுவனத்திற்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். கடவுள் அருளால் தற்போது படம் அதிகம் வருவதால் அந்த சம்பாத்தியத்தை வைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடிகிறது என்றும் கூறியிருந்தார்.

Leave a Comment