Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பரோலில் வந்த குணசேகரன் சக்தி மூலம் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். இதுவரை குணசேகரன் வீட்டில் ஜம்பமாக இருந்த நான்கு பெண்களும் சக்தி கொடுத்த சாட்டையால் வாடி வாசலை தாண்டி திமிரும் காளையாக ஜெய்ப்பதற்கு அடி எடுத்து வைத்து விட்டார்கள்.
அதுவும் சக்தி, கேட்ட கேள்வி சரியானது என்று யோசித்த பெண்கள் இனியும் குணசேகரன் வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு பண்ணி கிளம்பி விட்டார்கள். இனிமேல் தான் கதையை சூடு பிடிக்கப் போகிறது என்பதற்கு ஏற்ப அடி முட்டாளாக இருந்து அராஜகம் பண்ணும் குணசேகரன் வீட்டு ஆம்பளைங்களுக்கு சரியான பாடத்தை கற்பித்து பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜெயிக்க போகிறார்கள்.
அந்த வகையில் இனி மருமகள் சேர்ந்து கொடுக்கும் அடி ஒவ்வொன்றும் மரண அடியாக இருக்கப்போகிறது. ஆனால் அடுத்து குணசேகரனின் டார்கெட் இரண்டு வாரங்களுக்கு பின் ஜெயிலுக்கு போகாமல் இருப்பது எப்படி என்று யோசித்து அதற்கும் காய் நகர்த்தப் போகிறார்.
ஆனால் இதையெல்லாம் எதிர்பார்க்காத கதிர், கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரனிடம் தோற்றுக் கொண்டு வருகிறார். அத்துடன் கதிர் செய்த தில்லாலங்கடி வேலையும் குணசேகரன் கண்டுபிடித்து, கூட பிறந்தவனே இப்படி முதுகில் குத்தி விட்டான் என்ற துரோகத்தை பார்க்கப் போகிறார்.
அந்த வகையில் வீட்டுக்குள் இருந்து கொண்டே குணசேகருக்கு எதிரிகள் வளர ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியில் மருமகளிடம் தான் தஞ்சமடைய வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி தான் குணசேகரன் நிலைமை மாறும்.