Serial: வெள்ளி திரையில் வரும் படங்களை விட சின்னத்திரை மூலம் தினமும் பார்த்து ரசிக்கும் படியான சீரியலுக்கு மக்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது.
அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு சீரியலும் மக்களை கவரும் வகையில் இருக்கிறது. முக்கியமாக சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் இன்னும் வரை மறக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
அதில் ஒரு சீரியல் தான் ரோஜா. பிரியங்கா நல்காரி, ரோஜா கேரக்டரில் நடித்து சிப்பு சூரியன், அர்ஜுன் கேரக்டரில் பிரமாதமாக நடிப்பை கொடுத்து அனைவரையும் கவர்ந்தது. அந்த வகையில் இந்த சீரியல் கிட்டத்தட்ட 1300 எபிசோடு மேல் ஒளிபரப்பாகி கிட் அடித்தது.
அதனால் எப்பொழுது ரோஜா பார்ட் 2 வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை பூர்த்தி செய்யும் விதமாக கடந்த மாதம் ரோஜா 2 ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சன் டிவி மூலம் ஒளிபரப்பு செய்ய முடியாமல் சரிகம யூடியூபில் ஒளிபரப்பு செய்து வந்தார்கள்.
அந்த வகையில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 46 எபிசோடு கடந்த நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் எதுவும் வராததால் நாடகத்தை முடிப்பதற்கு கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து விட்டார்கள். இதில் மதி கேரக்டரில் நிவாஸ், மலர் கேரக்டரில் பிரியங்கா நல்காரி நடித்த வருகிறார்கள். இவர்களுடைய காதல் ஆரம்பித்த நிலையில் கல்யாணத்தில் முடிய போகிறது.
அத்துடன் மதியின் அக்காவாக இருக்கும் மணிமேகலை என்கிற ஹரிப்பிரியா, மதி மற்றும் மலருக்கு கல்யாணம் நடக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் மிஸ் யூ மை டீம் என்று பதிவு போட்டு கூடிய சீக்கிரத்தில் மறுபடியும் நம் சந்திக்கலாம் என போஸ்ட் போட்டிருக்கிறார். அந்த வகையில் ரோஜா பார்ட் 2 சீரியல் ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.