Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சவாரிக்காக 20 நாள் வெளியூரு போகிறார். இதனால் மீனா, வீட்டு வேலைகளையும் பார்த்து கல்யாண மண்டபத்தில் கிடைத்திருக்கும் ஆர்டரையும் நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று மீனா தனியாக போராட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் டெக்கரேஷனுக்காக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் பணம் கிடைத்தது.
மீதம் பணம் தேவைப்படுகிறது என்பதற்காக மீனா பேங்க் லோன் கேட்டு பேங்குக்கு போகிறார். ஆனால் அங்கே மீனாவுக்கு லோன் கிடைக்காமல் போய்விடுகிறது. இருந்தாலும் லோன் ஆபிசர் வட்டிக்கு கொடுக்கக்கூடிய நபரை சந்திக்க சொல்லி அட்ரஸை கொடுத்து விடுகிறார். மீனாவும், மீனா தம்பி சத்யாவும் சேர்ந்து அந்த நபரை பார்க்கப் போகிறார்கள்.
இதற்கிடையில் மீனாவுக்கு பேங்க் லோன் கிடைக்கவில்லை என்று தெரிந்த முத்து, சவாரிக்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது ரவிக்கு போன் பண்ணுகிறார். ரவியுடன் சேர்ந்து சுருதியும் இருப்பதால் இரண்டு பேரும் சேர்ந்து ஸ்பீக்கரில் முத்துவிடம் பேசுகிறார்கள். அப்பொழுது முத்து, மீனாவுக்கு டெக்கரேஷன் பணம் தேவைப்படுகிறது அதனால் பேங்க் லோன் கேட்க போயிருந்தார்.
ஆனால் அங்கே மீனாவுக்கு லோன் கிடைக்கவில்லை. அதனால் உங்களால் முடிந்தால் மீனாவுக்கு உதவி பண்ணுங்க, நானும் பக்கத்தில் இல்லை சவாரி விஷயமாக வெளியூர் கிளம்பி விட்டேன். திரும்பி வருவதற்கு 20 நாள் ஆகும் என்று சொல்லிவிடுகிறார். உடனே ரவியும் சுருதியும் சேர்ந்து மீனாவுக்கு உதவி பண்ணலாம் என்று மீனாவுக்கு போன் பண்ணி பணம் வேண்டுமா என்று கேட்கிறார்கள்.
அதற்கு மீனா, பணம் கேட்டு தான் ஒருவரை சந்திக்க வந்திருக்கிறேன். அதனால் நிச்சயம் அவர் மூலம் பணம் கிடைத்து விடும் என்று சொல்லிவிடுகிறார். அந்த வகையில் மீனாவுக்கு அந்த நபர் உதவி செய்ததை வைத்து மீனா கல்யாண மண்டபத்தில் எடுத்திருந்த ஆர்டரை நல்லபடியாக முடித்து விடுகிறார்.
முடித்த கையோடு மண்டபத்தின் ஓனரை சந்தித்து பணம் கேட்கிறார். அதற்கு அந்த ஓனர் நீங்கதான் மொத்த பணத்தையும் வாங்கி விட்டீர்களே, பணத்தை வைத்து தானே டெக்கரேஷனை முடித்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா என்று மீனாவை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள். மீனா நான் யாரையும் ஏமாற்றவில்லை நீங்கள் எனக்கு அட்வான்ஸ் படமாக 25 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தீங்க.
அப்படித்தான் அந்த அக்ரிமெண்டிலும் இருந்துச்சு அதனால் தான் நான் கையெழுத்து போட்டேன். இப்போது இப்படி மாத்தி பேசுகிறீர்களே என்று சொல்லி அந்த ஓனரிடம் கெஞ்சுகிறார். மீனா இப்படி கெஞ்சுவதை சிந்தாமணி மறைந்திருந்து பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். இந்த சந்தோஷத்தை உடனே விஜயாவிடமும் சொல்ல வேண்டும் என்று சிந்தாமணி, விஜயாவுக்கு போன் பண்ணி சொல்கிறார்.
உடனே விஜயாவும் சந்தோஷப்பட்டு மீனா இனி பிசினஸ் பண்ணவும் முடியாது லாபத்தை பார்க்கவும் முடியாது கடனாளியாகவும் இருக்கிறார் என்று குஷியாகிவிட்டார். இதற்கிடையில் மனோஜ்க்கு விபத்து ஏற்பட்ட நிலையில் கோவிலில் விஜயா வேண்டுதல் வைத்திருந்தார். அந்த வேண்டுதலை முடிப்பதற்காக ரோகினி மனோஜ் விஜயா மூன்று பேரும் சேர்ந்து கோவிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
மேலும் ஏமாந்து போன மீனா, பின்னணியில் இருப்பது சிந்தாமணி தான் என்று உணர்ந்து கொண்டு செய்த சதியை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவு பண்ணி சுருதி மற்றும் சீதாவை கூட்டணி சேர்த்து சிந்தாமணி முகத்திரையை கிழித்து விடுவார்கள். அந்த வகையில் இனி டெக்கரேஷன் ஆர்டர் அனைத்தும் சிந்தாமணிக்கு கிடைக்காமல் மீனாவுக்கு தான் கிடைக்கும். குறுக்கு வழியில் போன சிந்தாமணிக்கு கர்மா பதிலடி கொடுக்கப் போகிறது.