Rajini : 74 வயதிலும் ரஜினி ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வேட்டையன் படம் வெளியான நிலையில் இப்போது கூலி படத்தில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இதற்கு அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் ரஜினியால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று கவலையில் உள்ளார் சின்ன தம்பி.
அதாவது அட்லீ தான் இப்போது ஜவான் படத்திற்குப் பிறகு சல்மான் கான் வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஆரம்பத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பதிலாக ரஜினி தான் நடிக்க உள்ளாராம்.
ரஜினியால் தாமதமாகும் படம்
இந்த சூழலில் ரஜினி கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களில் பிஸியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு தான் அட்லீ படத்தில் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் சல்மான் கானின் படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர சில காரணங்களினாலும் படம் ஆரம்பிப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் அட்லி இந்த படத்தை சிறிது காலம் ஒத்தி வைத்து விட்டு அடுத்ததாக அல்லு அர்ஜுனின் படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினியின் கால்ஷீட் கிடைத்த பிறகு சல்மான்கான் படத்தை அட்லி தொடங்குவார்.