Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் விஜய், காவிரியை மட்டும் கூட்டிட்டு போவதற்காக வரவில்லை. காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி அவர்கள் அன்பை பெற்று காவிரியை கூட்டிட்டு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் பக்கத்திலேயே வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
ஆனால் அது விஜய் உடைய ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல ரக்கடான வேலைகளை செய்து வருகிறார். ஆனாலும் இது பிடிக்காத சாரதாவிற்கு தொடர்ந்து கோபம் வருகிறது. அந்த வகையில் நர்மதாவுக்கு தேவையான விஷயங்களையும் விஜய் செய்து கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார். அதனால் நர்மதாவும் தற்போது விஜயின் பக்கம் மாறி விட்டார்.
இப்பொழுது விஜய்க்கு ஆதரவாக சாரதாவை தவிர மற்றவர்கள் அனைவரும் சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் திடீரென்று விஜய் செய்யும் சில விஷயங்கள் சாரதாவிற்கு கோபத்தை அதிகரித்து வருகிறது. அப்படித்தான் தற்பொழுது பாட்டு சவுண்டை கூட்டி வைத்து கீழே இருக்கும் அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கிறார். இதை பார்த்து கடுப்பான சாரதா கோபப்படுகிறார்.
ஆனாலும் இதுவும் பண்ண முடியாமல் இருப்பதால் வீட்டிற்குள் வந்து புலம்புகிறார். இதோடு மட்டுமில்லாமல் காவேரி கடையில் விற்ற அப்பளக்கட்டை மொத்தமாக கடையிலிருந்து வாங்கிய விஜய், ஓனரிடம் கொடுத்து இதை தெரிந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். இந்த விஷயம் சாரதாவிற்கு தெரிய வந்ததும் காவிரியிடம் சண்டை போடுகிறார்.
விஜய்யிடம் எல்லாத்தையும் கொடுத்து விட்டு தான், நான் கடையில் வித்துட்டு வந்தேன் என்று சும்மா சொன்னியா. இதெல்லாம் நீயும் அவனும் சேர்ந்து போடுகிற பிளானா என்று விஜய் செய்த குளறுபடியில் காவேரி மாட்டிக் கொண்டு முழிக்கிறார். உடனே காவிரி, விஜய்யை பார்த்து ஏற்கனவே ஒப்பந்தத்தை போட்டு கல்யாணம் பண்ணியதால் எங்க அம்மா மனதார உடைந்து போய்விட்டார்கள்.
தற்போது மேலும் மேலும் அவர்களை கஷ்டப்படுத்தும் விதமாக நீங்கள் செய்த விஷயங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று திட்டி சண்டை போடுகிறார். அப்பொழுது விஜய், நீயும் உன்னுடைய குடும்பமும் வேண்டும். அதனால் தான் அவங்க மனதில் இடம் பிடிப்பதற்கு நான் இந்த மாதிரி பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு காவிரி நான் தான் நீங்க வேண்டாம் என்று உதறிவிட்டு வந்து விட்டேனே. மறுபடி மறுபடி ஏன் வந்து தொந்தரவு பண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு நீ என்னுடைய பொண்டாட்டி உன்னை விட்டு என்னால் இருக்க முடியாது என்று சொல்கிறார். உடனே காவிரி நான் உங்க பொண்டாட்டி என்ற நினைப்பு உங்களுக்கு எப்பொழுது வந்தது என்று கேட்கிறார்.
அதற்கு விஜய் நீ இரண்டாவது முறை கோபப்பட்டு கொடைக்கானலுக்கு போன பொழுது நீ என் பக்கத்தில் இல்லாத அந்த தருணத்தில் நான் உன்னுடைய அன்பை மொத்தமாக உணர்ந்தேன். நீ இல்லாமல் என்னால் ஒரு நொடி கூட இருக்க முடியாது . நீ இல்லாமல் நான் ஒன்றுமே இல்லாமல் போய் விடுவேன்.
காவிரி நீ என்னுடன் வந்துவிடு என்று மொத்தமாக காவிரியிடம் சரணடையும் வகையில் விஜய் அவருடைய மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தி விட்டார். அந்த வகையில் காவிரியும் விஜய் சொன்ன காதலை உணர்ந்து கொண்டு பீல் பண்ண ஆரம்பித்து விட்டார்.