Sivaangi: குக் வித் கோமாளி சிவாங்கி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா போதும் என சில வருடங்களுக்கு முன்பு இளைஞர்கள் ஏங்கிக் கிடந்தார்கள்.
அப்படிப்பட்ட சிவாங்கியவே காதலித்து ஒருவர் பின்னால் பிரேக்கப் செய்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. பொதுவாக எந்த ஒரு பேட்டியிலும் தன்னுடைய பெர்சனல் விஷயத்தை பற்றி பேசாத சிவாங்கி முதல் முறையாக தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி பற்றி பேசி இருக்கிறார்.
தனக்கு ஒரு காதல் வாழ்க்கை இருந்ததாகவும், ஆனால் அந்த நபர் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும், அந்த காதல் தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியதாகவும் பேசி இருக்கிறார்.
உடைந்து போன சிவாங்கியின் மறுபக்கம்
மேலும் அந்த காதல் பிரேக்கப்பிற்கு பிறகு தான் நான் உடல் எடையை குறைத்து, என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்.
அழகான ஆண்களை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அந்த ஆண்கள் நம்மை காதலிக்க நாமும் அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் தானே என சொல்லி இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது சிவாங்கி நடிகர் அஸ்வின் மீது கிரஷ் இருப்பதாக சொல்லி ஏகப்பட்ட அலப்பறைகள் செய்து கொண்டிருந்தார்.
அதை தொடர்ந்து வெளியில் வந்த பிறகும் இருவருக்கும் நல்ல நட்பு தொடர்ந்தது. தற்போது காதல் பிரேக் அப், அழகு என்பது பற்றி எல்லாம் பேசி இருப்பதால் சிவாங்கி அஸ்வினை காதலித்து அவருக்கு பிரேக் அப் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.