Dhanush: கூடிய சீக்கிரம் கோலிவுட்டுக்கு பெரிய கும்பிடு போட இருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழ் நடிகர் என்பதை தாண்டி பான் இந்தியா நடிகராக வேண்டும் என முடிவு செய்துவிட்டார் போல.
நடிகர் தனுஷுக்கு இந்த நடிகர் தான் போட்டி என்று அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவர முடியாது. இதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதை களம்.
திருடா திருடி படத்தில் பிரபு கேரக்டரில் நடித்த தனுஷ் தான் அசுரன் படத்தில் நடித்தாரா என்று நமக்கே சில நேரம் சந்தேகம் வந்துவிடும்.
பாலிவுட்டில் நடக்கும் பலே திட்டம்!
இவருடைய நடிப்புத் திறமை தான் இவரை தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என எல்லா சினிமா ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
தற்போது தனுஷ் ஹிந்தியில் தேரே இஷ்க் மேன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி செனான் நடிக்கிறார்.
தனுஷ் இதற்கு முன்பு நடித்த ரஞ்சனா மற்றும் கலாட்டா கல்யாணம் போன்ற படங்களில் அவருக்கு இந்தியில் வேறு யாராவது டப்பிங் செய்வார்கள்.
ஆனால் இந்த படத்தில் தனுஷ் இந்தி கற்றுக் கொண்டு அவரே டப்பிங் செய்ய இருக்கிறார். தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்துவதற்காக தான் தனுஷ் டப்பிங்கில் இறங்கி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.