புதன்கிழமை, மார்ச் 12, 2025

மார்ச் முழுக்க அப்டேட் திருவிழா தான்.. லோகேஷ் பிறந்தநாளில் வரும் சர்ப்ரைஸ்

March Upcoming Updates: இந்த வருடம் தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் குறிப்பிட்ட சில படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அது போக இந்த வருடம் முழுக்க அத்தனை டாப் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அதன்படி கடந்த மாதம் அஜித்தின் விடாமுயற்சி வெளிவந்தது. அதேபோல் குட் பேட் அக்லி டீசர் பட்டையை கிளப்பி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் முழுக்க அடுத்தடுத்து அப்டேட் வர இருக்கிறது. அது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

லோகேஷ் பிறந்தநாளில் வரும் சர்ப்ரைஸ்

இதில் மார்ச் 14 லோகேஷ் பிறந்தநாள் அன்று கூலி படத்தின் கிளிம்ஸ் வெளிவர உள்ளது. அன்றைய நாள் மற்றொரு ஸ்பெஷலும் இருக்கிறது.

அன்று தான் சிவாஜி ராவ் ரஜினிகாந்த் ஆக மாறினார். இதுவும் கூட முக்கிய அப்டேட் வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளிவர இருக்கிறது. ஜிவி பிரகாஷ் ஏற்கனவே இது பற்றி ஹின்ட் கொடுத்து விட்டார்.

அதனால் ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து ரெட்ரோ படத்தின் செகண்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளிவர உள்ளது.

அதை அடுத்து விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா மார்ச் 20ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

சித்தா அருண்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் பார்ட் 2 மார்ச் 27ஆம் தேதி வெளிவர உள்ளது. முதல் பாகம் இதன் பிறகு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News