புதன்கிழமை, மார்ச் 12, 2025

ஹிந்திகாரன் கூட இங்க வந்து வீடு வாங்கி செட்டிலாயிட்டான்.. ஆனா சொந்த ஊர்ல இருந்துகிட்டு நம்ம படுற பாடு இருக்கே, வைரல் மீம்ஸ்

Memes: தற்போது தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் அரசியல் கட்சியினர் மொத்த வன்மத்தையும் கொட்டி வருகின்றனர்.

அதேபோல் சினிமா ரசிகர்கள் தங்கள் ஹீரோவை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அதே சமயம் போட்டி ஹீரோக்களை முடிந்த அளவு நெகட்டிவிட்டியை பரப்பி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு, தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சலசலப்பு இருக்கிறது.

அதேபோல் ஆளும் கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே வெளிப்படையான போர் தொடங்கி இருக்கிறது. அடுத்த வருடம் ஆட்சியை யார் பிடிப்பது என்ற போட்டி ஆரம்பித்துவிட்டது.

இப்படி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் சோசியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஹிந்திகாரன் கூட தமிழ்நாட்டுல வந்து வீடு வாங்கி பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருக்கான்.

ஆனா சொந்த ஊர்ல இருந்துகிட்டு இன்னும் அவமானப்பட்டு கிட்டு இருக்கோம். ஹிந்தி வேணும்னு சொல்றவங்க அத ஹிந்திலயே சொல்லுங்க ஏன் தமிழ்ல சொல்றீங்க.

இப்படி பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி இணையத்தை கலக்கி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News