புதன்கிழமை, மார்ச் 12, 2025

நீங்க போனா சினிமாக்கு எந்த இழப்பும் இல்ல.. தளபதிக்கு கருத்தூசி போட்ட ஆல் இன் ஆல் நடிகர்!

Vijay: யாரு இல்லன்னாலும் சினிமா ஓடும் என்று பகிரங்கமாக பேசி இருக்கிறார் பிரபல நடிகர். நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக ஆகப்போவது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு சாரார் தமிழ் சினிமாவின் வணிகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு சிலரோ எந்தவித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

தளபதிக்கு கருத்தூசி போட்ட நடிகர்

இதிலிருந்து மாறுபட்ட ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார் நடிகர் சிங்கம்புலி. சினிமா யார் இருந்தாலும் இல்லை என்றாலும் ஓடிக்கொண்டே தான் இருக்கும்.

சினிமாவில் நான் ஜெயித்து விட்டேன் என்று சொல்பவர்கள் சினிமாவை சரியாக படிக்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமாவால் நாம் ஜெயித்துக் கொள்ளலாம் ஆனால் சினிமாவை ஒரு நாளும் யாரும் ஜெயிக்க முடியாது. எப்பேர்பட்ட நடிகர்கள் சினிமாவை விட்டு விலகினாலும் அடுத்தடுத்து அந்த இடத்தை நிரப்ப ஆட்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள் என சொல்லி இருக்கிறார்.

Trending News