புதன்கிழமை, மார்ச் 12, 2025

செந்திலுக்கும் தங்கமயிலுக்கும் டார்ச்சர் கொடுக்கும் பாண்டியன்.. ரணகளத்திலும் குதூகலமாக இருக்கும் அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கூட்டுக் குடும்பத்தில் என்னதான் ஒற்றுமையாக சந்தோசமாக இருந்தாலும் அவ்வப்போது ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக கதை நகர்ந்து வருகிறது. அதாவது பொய் சொல்லி என்னதான் ஏமாற்றி கல்யாணம் பண்ணி வந்தாலும் தற்போது ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லாமல் நரக வேதனையை தான் தங்கமயில் அனுபவித்து வருகிறார்.

தங்கமயில் படிக்கவில்லை அத்துடன் வேலைக்கு போகவும் பிடிக்கவில்லை என்றாலும் பாண்டியன் வற்புறுத்துதலால் தங்கமயில் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஒவ்வொரு நாளும் தங்க மயிலுக்கு டார்ச்சர் ஆகத்தான் அமைகிறது. அத்துடன் சரவணன், அப்பா பேச்சைக் கேட்டுக் கொண்டு தங்கமயிலே வேலைக்கு போக சொல்லி வற்புறுத்தி பொண்டாட்டியை புரிந்து கொள்ளாத அளவிற்கு தான் தவிக்க விட்டிருக்கிறார்.

நேரம் ஆகியும் வேலை முடியாததால் தங்கமயில் ஆபீஸில் ஒரு மீட்டிங் இருக்கிறது என்று கோமதிக்கு போன் பண்ணி சொல்லுகிறார். உடனே கோமதி, சரவணனுக்கு ஃபோன் பண்ணி நீ வரும்போது தங்கமயில் கூட்டிட்டு வந்துவிடு என்று சொல்கிறார். சரவணன், தங்கமயிலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நேரடியாக ஆபீஸ்க்கு வந்து விடுகிறார். வந்ததும் தங்கமயிலுக்கு போன் பண்ணி உன்னுடைய ஆபீஸ்க்கு வெளியில் தான் நான் இருக்கிறேன்.

உன்னை கூட்டிட்டு போக வந்து இருக்கிறேன் நீ வா என்று கூப்பிடுகிறார். இதை கேட்டு பயந்து போன தங்கமயில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவிக்க ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் கடை வேலை எல்லாம் முடித்துவிட்டு சோர்வாக தலைவலியுடன் வரும் செந்தில் நேரடியாக அடுப்பங்கரைக்கு சென்று கோமதி மற்றும் மீனாவிடம் ஒரு டீ கேட்கிறார். அந்த வகையில் மீனா செந்திலுக்கு டீ வந்து கொடுக்கிறார்.

அப்பொழுது பாண்டியன் வந்த நிலையில், செந்திலை ஒரு மனுஷனாக கூட மதிக்காமல் ஏன் இவ்வளவு சீக்கிரமாக கடைய மூடிட்டு வந்தாய். உனக்கு வீட்டில் அப்படி என்ன வேலை இருக்கிறது, வாங்க வேண்டிய பணத்தை எல்லாம் வசூல் பண்ணி விட்டாயா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அத்துடன் செந்தில் பணம் வாங்கி விட்டேன் என்று கொடுத்த நிலையில் மொத்த பணத்தையும் கொடுத்து விட்டாயா இல்லை என்றால் நீ ஏதாவது எடுத்து இருக்கியா என்று திருடன் மாதிரி செந்திலை சந்தேகப்பட்டு கேட்கிறார்.

இதை பார்த்த மீனா மற்றும் செந்திலுக்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது. ஆனாலும் கோமதி, பாண்டியனிடம் நீங்கள் இந்த அளவுக்கு பேசியிருக்க தேவையில்லை என்று கண்டிக்கிறார். இருந்தாலும் பாண்டியன் எதையும் காது கொடுத்து கேட்காமல் செந்திலை மட்டமாக பேசி டார்ச்சர் செய்து விட்டார். ரூமுக்குள் வந்த செந்தில், பாண்டியனின் அராஜகத்தை தாங்காமல் மீனாவிடம் கோபப்படுகிறார். மீனா சமாதானப்படுத்திய நிலையில் கோமதியும் வந்து செந்திலை ஆறுதல் படுத்துகிறார்.

இதற்கிடையில் இவ்வளவு பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் பொழுது அரசி எதையும் கண்டுகொள்ளாமல் மணிக்கணக்காக குமரவேலுவிடம் போன் பண்ணி பேசி சிரித்து கொள்கிறார். யார் எப்படி போனாலும் என்ன, எனக்கு என்னுடைய காதல் தான் முக்கியம் என்று சொல்வதற்கு ஏற்ப குமரவேலுவை முழுசாக நம்பி விட்டார். அந்த வகையில் அரசின் காதல் விவகாரம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வரப்போகிறது. ஓவராக ஆடிய பாண்டியனுக்கு அரசி கொடுக்கும் பதிலடியாகவும் இருக்கப் போகிறது.

Trending News