Gossip : வாரிசு நடிகரான இவர் ஆரம்பத்தில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. ஆனாலும் தனது கடின உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் போகவில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது பிழைப்பில் மண்ணள்ளிப்போடும் படி அவரது மனைவி மோசமான விஷயத்தை செய்திருக்கிறார்.
அதாவது அவரது சினிமா கேரியருக்கே உலை வைத்துவிட்டார். இங்கு சினிமாவில் திறமைக்கு மதிப்பே கிடையாது என பல வசனங்களை வாரிவிட்டுவிட்டார். மீடியா முன்னாள் சொன்னால் அது சும்மா இருக்குமா.
மனைவியால் மோசமான ஹீரோவின் கேரியர்
அந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க அவரது கணவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். அதோடு இதனால் காண்டான ரசிகர்கள் அந்த நடிகரின் படத்தை பார்க்க கூடாது என கண்டனம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இத்தனை வருஷமாக பெரிய இடத்தில் வரவேண்டும் என்ற ஹீரோ உழைத்த நிலையில் அதை ஒரு நிமிஷத்தில் சுக்குநூறாக உடைத்து விட்டார். மீண்டும் மக்கள் மனதில் நன் பெயரை எடுக்க வேண்டும் என்பது சாதாரண விஷயம் அல்ல.
மனைவியால் மொத்தமும் போச்சே என்ற சோகத்தில் இருக்கிறாராம் ஹீரோ. இனிமேல் தானே தயாரிக்கும் படத்தில் அவரை வைத்து இயக்க முன்வரும் இயக்குனர்கள் படத்தில் தான் அவர் நடிக்க முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது.