வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

ஷங்கரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி.. 32 வருட சினிமா வாழ்க்கை சகாப்தம்

Director Shankar: இயக்குனர் ஷங்கர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார்‌. ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சிறிது காலம் ஷங்கர் பணியாற்றி இருந்தார்.

அதன் பிறகு படங்களை இயக்கிய நிலையில் அதிக பட்ஜெட் படங்களை எடுக்க ஆரம்பித்தார். இதனால் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரையும் பெற்றார். அதுவும் முதல் படத்திலேயே அவருக்கு இந்த பெயரும் கிடைத்துவிட்டது. அடுத்ததாக சமூக விழிப்புணர்வு சார்ந்த படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

அந்த வரிசையில் வெளியான படம் தான் இந்தியன், முதல்வன், அந்நியன் ஆகிய படங்கள். இவை மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தியன் 2 படத்தையும் எடுத்திருந்தார். அடுத்ததாக அவருடைய வளர்ச்சி தான் படங்களில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது.

இயக்குனர் ஷங்கரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி

தமிழ் சினிமாவுக்கு விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி எந்திரன் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். மேலும் கமர்சியல் படங்களையும் ஷங்கர் விட்டு வைக்கவில்லை. காதலன், ஜீன்ஸ் போன்ற ஆக்ஷன், காதல், ட்விஸ்ட் நிறைந்த படங்களையும் கொடுத்துள்ளார்.

சிவாஜி படத்தில் மூலம் முதல் 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ஷங்கர் பெற்றார். அவரது வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்த படம்தான் ஐ. எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

அதன்பிறகு 2.0 படத்தை எடுத்த நிலையில் விஷுவல் மேலோங்கி இருந்த நிலையில் கதையில் பெரிய கவனம் செலுத்தவில்லை. அடுத்ததாக இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமான நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் சந்தித்தது.

மேலும் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த அளவு இல்லை. இந்தியன் 3 படத்தில் மூலம் மீண்டும் சங்கர் கம்பர் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News