வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

பாக்யாவை ரவுண்டு கட்டி வெளுத்து விட்ட குடும்பம்.. மாமியாரிடம் மல்லுக்கட்டிய ஜெனி, கோபியால் வந்த வினை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செல்வி மகனை கண்ணுமுன்னு தெரியாமல் செழியன் அடித்து விட்டார். இதனால் ஆகாஷ் ரொம்பவே பரிதாபமான நிலையில் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார். ஆகாஷை இந்த நிலைமையில் பார்த்ததும் செல்வியும் துடித்துப் போய்விட்டார். இதையெல்லாம் பார்த்த பாக்யா வீட்டிற்கு கோபமாக போகிறார்.

போனதும் செழியன் பண்ணுனது தவறு என்று எடுத்துச் சொல்லும் அளவிற்கு பேசுகிறார். ஆனால் செழியன் என் மீது எந்த தவறும் இல்லை, நம்ம விட்டுப் பெண்ணிடம் பேசினால் நான் இப்படித்தான் நடந்து கொள்வேன். இதற்கு மேலேயும் அவன் பண்ணுனா அவனை வெட்டி கொலை பண்ணுவேன் என்று ரவுடி மாதிரி பேசிய நிலையில் கோவப்பட்ட பாக்கியா, செழியனை அடித்து விடுகிறார்.

உடனே ஜெனி, எதற்கு இப்படி செழியனை போட்டு அடிக்கிறீங்க. அவன் பக்கத்தில் இருக்கும் நியாயத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனியா மீது இருக்கும் பாசத்தினால் தான் ஒரு அண்ணனாக அப்படி நடந்து கொள்கிறார். அதை கூட நீங்கள் புரிந்து கொள்ளாமல் என் கண்முன்னாடியே இப்படி அடிக்கிறீங்க என்று பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்.

இதற்கு பாக்கியா, ஆகாஷை அந்த அளவுக்கு இவன் அடித்து துன்புறுத்திருக்கிறான். பாவம் அவன் வேதனையுடன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான், அவன் நிலைமையை பார்த்து செல்வி துடித்து போய் நிற்கிறார். இவன் பண்ணின காரியத்தை பக்கத்தில் இருப்பவர்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார்கள். போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தால் செழியன் ஜெயிலில் தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி, அப்படியே ஜெயில் கோர்ட்டு பிரச்சினை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாங்கள் பார்க்காத கோர்ட்டா கேசா என்று கோபியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமிராக பேசுகிறார். பிறகு ஜெனி, என்ன இருந்தாலும் நீங்கள் செழியினை அடித்தது தவறு தான். நானும் செழியனும் காதலித்த பொழுது எனக்கும் செழியனுக்கும் தகுதி படிப்பு எதுவும் வித்தியாசமாக இல்லை.

ஆனால் அதற்கே என்னுடைய அப்பா போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து பிரச்சனை பண்ணினார். அப்படி இருக்கும் பொழுது ஆகாஷை காதலிப்பதற்காக கொந்தளித்த செழியன் ஏதோ கோபத்தில் பண்ணி விட்டான். அதற்காக எல்லாரும் முன்னாடியும் இப்படி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார். உடனே அங்கு இருப்பவர்களும் பாக்கியம் மீது தான் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப ரவுண்டு கட்டி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

போதாதற்கு இந்த ஈஸ்வரி, பாக்கியா உடைய குடும்பத்தையும் அசிங்கப்படுத்தும் விதமாக அவமானப்படுத்தி பேசி விட்டார். கோபியும், பாக்கியா மீது தான் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப நீ எப்பொழுதும் உன்னுடைய தோழி செல்விக்கு தான் சப்போர்ட்டாக இருப்பாய். உனக்கு இந்த குடும்பத்தை விட செல்வி குடும்பம் தான் ரொம்ப முக்கியம். அதனால் இனி இனியா வாழ்க்கையில் நீ தலையிட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு பாக்கியம், நீங்க பார்த்த வேலை தான் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பார்த்துவிட்டேன். அதனால் இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ஹாஸ்பிடல் இருக்கும் ஆகாஷை எழில் பார்த்து பேசி இரவு நேரம் முழுவதும் கூடவே இருக்கிறார். இருந்து கொண்டே ஈஸ்வரி மற்றும் கோபி சண்டை போடுகிறார்கள். கடைசியில் இனியா என்னால தான் எல்லா பிரச்சினையும் வந்திருக்கிறது. நான் இனி ஆகாஷ் இடம் பேசவும் மாட்டேன் பழகவும் மாட்டேன்.

தயவு செய்து உங்களுடைய சண்டையை நிப்பாட்டி விட்டு பழைய மாதிரி நிம்மதியாக இருங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்று பிளாக்மெயில் பண்ணி அனைவரையும் வாயடைக்க வைக்கிறார். இதற்கெல்லாம் காரணம் கோபி தான் என்று புரிந்து கொண்ட பாக்யா, கோபியை வீட்டை விட்டு அனுப்புவதற்கு முடிவு எடுத்து விட்டார்.

Trending News