Perusu Movie Review: இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், நிஹாரிகா, சாந்தினி என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பெருசு இன்று வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரிலேயே இது எந்த மாதிரியான படம் என தெரிந்தது.
இரட்டை அர்த்த வசனங்களுடன் முழு நீள காமெடி படமாக வெளிவந்திருக்கிறது இந்த பெருசு. படத்தை பார்த்த செலிபிரிட்டி முதல் ஆடியன்ஸ் வரை தற்போது பாசிட்டிவ் ரிவ்யூ கொடுத்து வருகின்றனர்.
காமெடி அலப்பறையில் பெருசு எப்படி இருக்கு.?
அதன்படி படம் எப்படி இருக்கு? தியேட்டரில் குடும்பத்தோடு பார்க்கலாமா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
கதைப்படி வைபவ் சுனில் இருவரின் அப்பா வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் வந்து திடீரென இறந்து விடுகிறார். ஆனால் இறுதி சடங்கை நடத்த முடியாத அளவிற்கு ஒரு வினோதமான பிரச்சனையில் சிக்குகிறது அந்த குடும்பம்.
பெருசின் மானம் போகாமல் எப்படி அடக்கம் செய்வது என அவர்கள் பல விதங்களில் முயற்சி செய்கின்றனர். இறுதியில் பெருசின் இறுதி சடங்கு நடந்ததா? அந்த பிரச்சனை தீர்ந்ததா? என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லி இருக்கிறது இப்படம்.
ஹீரோ வைபவ் படம் முழுக்க குடித்துவிட்டு அலப்பறை செய்பவராக வருகிறார். அண்ணன் சுனிலுடன் சேர்ந்து பிரச்சனையை தீர்க்க சாமியார் வரை அவர் செல்வது செம ரகளை.
அதேபோல் திடீரென வீட்டுக்குள் ஒவ்வொரு சொந்தமாக வருவது, பக்கத்து வீட்டு ஊர் புரணி பேசும் ஆன்ட்டியிடம் இருந்து தப்பிக்க போராடுவது என கதாபாத்திரங்கள் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர்.
ஹீரோயின் நடிப்பில் மட்டும் செயற்கைத் தனம் தெரிகிறது. அவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
மேலும் நட்சத்திர பட்டாளங்கள் அதிகமாக இருந்தும் சில இடங்களில் தான் காமெடி ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. முதல் பாதி இடைவேளை என அனைத்துமே சுவாரஸ்யம்.
ஆனால் இரண்டாம் பாதி சில இடங்களில் சலிப்பை தருகிறது. அதை எல்லாம் தவிர்த்தால் கலகலப்பான நகைச்சுவை படம் தான் இந்த பெரிசு.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5