சனிக்கிழமை, மார்ச் 15, 2025

எதிர்நீச்சல் 2 சீரியலில் சஸ்பென்ஸ் ஆக இருக்கும் 3 கேரக்டர்கள்.. கமுக்கமாக இருந்து காரியத்தை சாதிக்கும் குணசேகரன்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், நல்லதோ கெட்டதோ இதுவரை குணசேகரன் வீட்டுக்குள்ளே இருந்து போராட நினைத்த நான்கு பெண்களும் தற்போது வீட்டை விட்டு வெளியேறி சொந்த காலில் நின்னு ஜெயித்து காட்டுகிறோம் என்று சபதம் போட்டு அவர்களுடைய வெற்றி பயணத்தை துவங்க வந்து விட்டார்கள்.

ஆனாலும் அவர்களுடன் பிள்ளைகளை கூட்டிட்டு வராமல் தனியாக வந்து அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை உண்டாக்கிய பிறகு பிள்ளைகளுக்கு நல்ல பாதையை அமைத்து கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் குணசேகரன் வீட்டில் தான் தாரா ஐஸ்வர்யா மற்றும் தர்ஷினி இருக்கிறார்கள். பெண்கள் வீட்டை விட்டு போன நிலையில் அறிவுக்கரசி சமைத்துக் கொடுப்பதற்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கிறார்.

அவருடன் சேர்த்து அறிவுக்கரசியின் பெரியம்மாவையும் கூட்டிட்டு வந்து குணசேகரின் வீட்டில் விட்டுட்டு போயிருக்கிறார். இதனால் கடுப்பான தாரா, நந்தினிக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார். பிறகு சக்தி வந்த நிலையில் நடந்த விஷயத்தை தாரா சொல்கிறார். ஆனால் சக்தி ஏதோ ஒரு காரணத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் குணசேகரன் பக்கம் நிற்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

அதனால் நிச்சயம் அந்த குழந்தைகளையும் தர்ஷன் கல்யாணத்தையும் நடக்க விடாமல் பாதுகாத்துக் கொள்வார். இவருக்கு அந்த வீட்டிலேயே இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்று தான் சக்தி அமைதியாக இருப்பது போல் இருக்கிறது. இதில் எதிர்பார்க்காத விதமாக வந்த குந்தவை கேரக்டர் எந்த மாதிரியாக இருக்கப் போறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் நிச்சயம் குந்தவை மற்றும் சக்தி நட்பு ரீதியாக தான் பழகுவார்கள். அத்துடன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நான்கு பெண்களையும் பார்ப்பதற்கு வசுவும் வந்திருக்கிறார். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் வசூல் என்டரி கொடுத்த நிலையில் இன்னும் சஸ்பென்ஸ் ஆக நிறைந்திருக்கும் மூன்று கேரக்டரையும் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில் அப்பத்தா, கௌதம் மற்றும் ஆதிரையின் காதலனாக இருந்த அருனும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடைய கேரக்டர் நிச்சயம் அதிரடியாகவும் கதையை வேறு ஒரு கோணத்தில் கொண்டு போகப் போகிறது. மேலும் முதல் சீசனில் குணசேகரன் கேரக்டரில் வேலராமமூர்த்தி என்டரி கொடுத்தபோது ஓவர் கத்தல், நிறைய நெகட்டிவ் வார்த்தைகள் என முகம் சுளிக்கும் அளவிற்கு தான் இருந்தது.

இதுவே இந்த நாடகத்திற்கு மைனஸ் ஆக இருந்த நிலையில் தற்போது குணசேகரன் கேரக்டர் முற்றிலுமாக மாறப்பட்டிருக்கிறது. அதாவது அமைதியாகவும் நிதானத்துடன் காரியத்தை சாதிக்கும் அளவிற்கு தந்திரவாதியாகவும் குணசேகரன் கேரக்டர் இருக்கிறது. அதனால் தான் கமுக்கமாக இருந்து ஒவ்வொரு காரியத்தையும் சாதித்து வருகிறார்.

Trending News