Sun tv Serial: சன் டிவி சீரியலின் வெற்றிக்கு காரணம் மக்களுக்கு ஏற்ற மாதிரி கதைகளை கொடுத்து ஒரு சீரியலையும் மக்கள் மிஸ் பண்ண முடியாத அளவிற்கு விறுவிறுப்பை கொடுத்து வருவது தான். அதிலும் ஏதாவது ஒரு சீரியல்கள் எதிர்பார்த்தபடி மக்களை திருப்தி படுத்தவில்லை என்றால் அந்த சீரியலை உடனே நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக புது சீரியல்களை கொண்டு வந்து விடுவார்கள்.
அதனால் தான் 19 சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஆடுகளம் என்ற சீரியல் வரப்போவதாக ஏற்கனவே ப்ரோமோ எல்லாம் வெளியாகிவிட்டது. ஆனாலும் சில சீரியல்கள் முடியும் தருவாயில் இழுத்தடித்துக் கொண்டு இருப்பதால் ஆடுகளம் சீரியல் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த சீரியலை தொடர்ந்து புதுசாக இன்னொரு சீரியலுக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் செல்லமே என்ற சீரியல் கூடிய சீக்கிரத்தில் வரப்போகிறது. இதில் ஹீரோ கேரக்டரில் சுந்தரி சீரியலில் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டரில் நடித்த விஷ்ணு மேனன் என்கிற கார்த்திக் தான் கமிட் ஆகி இருக்கிறார். இவருடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருந்தாலும் இவருடைய நடிப்புக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நிலையில் தற்போது முழு ஹீரோ வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இவருக்கு ஜோடியாக கண்மணி மற்றும் தேஜஸ்வினி ஹீரோயினாக நடிக்கப் போகிறார்கள். இவர்கள் இருவருமே ஜீ தமிழ் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த ஹீரோயின்கள். முதன் முதலாக சன் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஆடுகளம் என்ற சீரியலை தொடர்ந்து செல்லமே சீரியலும் ஒன்றாக ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.