Gossip : சினிமாவில் புதுவராக தற்போது பல இளம் நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அவர்களுக்கு மவுசு அதிகமாக பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். ஆனால் இளம் ஹீரோ ஒருவர் மூத்த நடிகைகள்தான் வேண்டும் என அடம் பிடித்து வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் பிரபலமான ஹீரோக்கள் சமீபகாலமாக நிறைய பேர் இருந்து வருகிறார்கள். அவ்வாறு சின்னத்திரையில் இருந்து வந்த ஹீரோ பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலமாக்கி கொண்டார்.
இதன் மூலம் சினிமா வாய்ப்பையும் பெற்ற அவர் சில ஹிட் படங்களையும் கொடுத்து விட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளியாகி கொண்டிருந்தது. அதெல்லாம் கன்டென்ட்காக செய்தது என்று வெட்கமே இல்லாமல் சொன்னார்.
முத்த நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் ஹீரோ
இது ஒரு புறம் இருக்க இப்போது இளம் நடிகர் நடிக்கும் படத்தில் மூத்த நடிகை ஒருவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் கண்டிப்பாக மாஸ் ஹிட்டாகும் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அடுத்ததாக தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களிலும் மூத்த நடிகைகள் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்.
இவர் கேட்ட மாதிரி மூத்த நடிகைகளை எப்படி கமிட் செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் கதறுகிறார்கள். பெரிய ஹீரோக்களே இளசு நடிகைகள் வேண்டும் என்று அடம் பிடிப்பது வழக்கம்.
ஆனால் இவரோட பாலிசி தினுசா இருக்கே என பலரும் புலம்பி வருகின்றனர். மேலும் நடிகர் கேட்ட மாதிரி சீனியர் நடிகைகளை வலை வீசி தேடி வருகின்றனராம் ஹீரோவின் பட தயாரிப்பாளர்கள்.