சனிக்கிழமை, மார்ச் 15, 2025

எதுக்கு இப்ப ₹க்கு பதில் ரூ.? எல்லாம் நீங்க கதறனும்னு தான், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே அரசியல் சலசலப்பு அதிகமாக இருக்கிறது.

போட்டி போட்டு ஹாஷ் டேக் போடுவதில் தொடங்கி மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். மாநில அரசும் மத்திய அரசும் இப்படி வெளிப்படையாக முட்டிக்கொள்வது பல பேருக்கு சுவாரசியம் தான்.

பொழுது போகலைன்னு சோசியல் மீடியா பக்கம் வருபவர்கள் இதை நன்றாகவே என்ஜாய் செய்கின்றனர். அதேபோல் மீம்ஸ் போட்டு தங்கள் பங்குக்கு கலாய்க்கின்றனர்.

அதிலும் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசை தாக்கும் வகையில் பல விஷயங்கள் இருக்கிறது.

முதலாவதாக இதுவரை இருந்த ₹ குறியீடை மாற்றி ரூ என நடைமுறைப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. இதற்கு பிஜேபி தமிழிசை, அண்ணாமலை ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றிய மீம்ஸ் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. எதுக்கு இப்போ ரூ, எல்லாம் நீங்க கதறனும்னு தான்.

இந்தியாவை பாரத் அப்படின்னு சொல்லும் போது மட்டும் நல்லா இருந்துச்சோ. உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு தக்காளி சட்னியா என மத்திய அரசை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News