Coolie: லோகேஷின் பிறந்த நாளான இன்று கூலி பட அப்டேட்டை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஏற்கனவே சினிமா விமர்சகர்கள் இன்று க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும் என ஏகப்பட்ட அலப்பறை கொடுத்தனர்.

ஆனால் காத்திருந்து காத்திருந்து நேரம் போனது தான் மிச்சம். இப்படி பண்ணிட்டியே தல என சன் பிக்சர்சை லோகி ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
ஆனால் சிறு ஆறுதலாக முக்கிய சஸ்பென்சை உடைத்திருக்கிறார் லோகேஷ். அதாவது பான் இந்தியா படமாக உருவாகும் கூலியில் நாகர்ஜுனா, உபேந்திரா இருப்பது நமக்கு தெரியும்.
ஷூட்டிங் ஸ்பாட் வைரல் புகைப்படம்
ஆனால் பாலிவுட் கேமியோ மட்டும் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. அதையும் கடந்த வாரம் சோசியல் மீடியாவில் சிலர் ஓப்பன் செய்திருந்தனர்.
அதன்படி அமீர்கான் முக்கிய ரோலில் வர இருப்பதாக செய்திகள் கசிந்தது. அதை உறுதி செய்யும் பொருட்டு லோகேஷ் அவருடன் கலந்துரையாடும் போட்டோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியஸாக இருவரும் அமர்ந்து பேசி கொண்டிருப்பது போல் இருக்கிறது அந்த போட்டோ. அமீர்கானுக்கும் இன்று தான் பிறந்தநாள். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது