சனிக்கிழமை, மார்ச் 15, 2025

ரெண்டு மணி நேரத்துல 40 சிகிரெட் பிடிச்சேன்.. ரஜினியையே மிஞ்சிட்டாரு போல

Rajini : சினிமாவில் ஆரம்பத்தில் சில கெட்ட பழக்கத்திற்கு அடிமையான சிலர் அதன் பிறகு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டது உண்டு. அந்த வகையில் ரஜினி தான் மது மற்றும் சிகரெட் ஆகியவற்றில் அடிமையாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

அதோடு தினமும் அசைவ சாப்பாடு இருந்தால் தான் சாப்பிடுவேன் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது தனது மனைவியால் எல்லாவற்றையுமே விட்டுவிட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் நேரடியாகவே சொல்லி உள்ளார்.

இந்த சூழலில் ரஜினியே மிஞ்சும் அளவிற்கு நடிகர் ஜீவா 2 மணி நேரத்தில் 40 சிகரெட் அடித்ததாக கூறியிருக்கிறார். மிகவும் திறமையான நடிகர் தான் ஜீவா. ஆனால் போராத காலம் அவருக்கு சரியான படங்கள் அமையாமல் இருக்கிறது.

ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு நடிகர் செய்த காரியம்

இப்போது ஜீவா இயக்குனர் பா விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் அகத்தியா என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறது.

இந்த சூழலில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜீவா தன்னுடைய பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் கற்றது தமிழ் படத்தை பற்றி பேசினார்.

இந்த படத்தில் சிகிரெட் புடிச்சு டயலாக் பேசுற மாதிரி ஒரு சீன் உள்ளதாம். அப்படி பேசும்போது டயலாக் மிஸ் பண்ணி விடுவாராம். இப்படியே கிட்டத்தட்ட 46 டேட் போய்விட்டதாம்.

அப்போது இரண்டு மணி நேரத்தில் 40-க்கும் அதிகமான சிகிரெட் பிடித்து விட்டேன். அதனால் எனக்கு தலையே சுற்றி விட்டது என்று ஜீவா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Trending News