Paramasivan Fathima Trailer: இசக்கி சரவணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி, எம் எஸ் பாஸ்கர் என பலர் நடித்திருக்கும் பரமசிவன் பாத்திமா ட்ரைலர் வெளியாகி உள்ளது.
எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் விமலுக்கு இப்படம் நிச்சயம் ஒரு பிரேக் கொடுக்கும். அந்த அளவுக்கு ட்ரைலரின் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
மத பிரச்சினையை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் தலைப்பை பார்த்ததுமே இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதற்கேற்றார் போல் மூன்று ஊர் மூன்று மதம் அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனை பஞ்சாயத்து தான் படத்தின் கதை. அந்நியர்கள் உள்ளே நுழையக்கூடாது, சாத்தான்கள் வர தடை என பெயர் பலகையிலேயே ஆரம்பிக்கிறது விரோதம்.
பரமசிவன் பாத்திமா ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
அதில் பள்ளி வாத்தியாராக வரும் விமல், சாயாதேவி இருவரும் காதலிக்கின்றனர். ஆனால் மதம் இதற்கு தடையாக இருக்க அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
இதில் எம் எஸ் பாஸ்கர் பாதிரியாராக வருகிறார். ஆனால் வட்டார வழக்கில் அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல்.
வெள்ளக்காரங்க மட்டும் இங்க வரலைன்னா நீ எல்லாம் பிச்சைதான் எடுத்து இருக்கணும். அந்த வெள்ளைக்காரனே இங்க பிச்சை எடுக்க தான் வந்தான்.
சர்ச்சுக்குள்ள மாரியம்மன் சிலையை வச்சுட்டாங்க. அப்புறம் மாரியம்மாவ மேரி அம்மாவா நெனச்சு கும்பிடுறோம் என வசனங்களும் கவனம் ஈர்க்கிறது.
இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.