சனிக்கிழமை, மார்ச் 15, 2025

பெருசு vs ஸ்வீட் ஹார்ட்.. போட்ட காசு வந்ததா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Perusu VS Sweet Heart: இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து மினிமம் பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. அதில் இந்த வாரம் ரீ ரிலீஸ் உட்பட பத்து படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் போட்டி என்று பார்த்தால் பெருசு மற்றும் ஸ்வீட் ஹார்ட் இரு படங்களுக்கு தான். யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் ஸ்வீட் ஹார்ட் இளைஞர்களை குறிவைத்து வந்துள்ளது.

ரிலேஷன்ஷிப் பற்றிய இப்படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதை வைத்து பார்க்கும் போது இதன் முதல் நாள் வசூல் 30 லட்சமாக இருக்கிறது.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபவ், சுனில், சாந்தினி, நிஹாரிகா என பல நட்சத்திரங்கள் நடிப்பில் பெருசு வெளியாகி இருக்கிறது. இதன் ட்ரெய்லரே வேற லெவலில் இருந்தது.

திடீரென இறந்து போகும் அப்பா, சாவை வெளியில் சொல்லாத முடியாத அளவுக்கு பிரச்சனை, மானத்தை காப்பாற்ற போராடும் குடும்பம் என காமெடி கலாட்டாவாக இருக்கிறது இப்படம்.

முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் இருப்பதாலேயே தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி இப்படத்தின் முதல் நாள் வசூல் 60 முதல் 70 லட்சமாக உள்ளது.

இப்படியாக இந்தப் போட்டியில் பெருசு போட்ட காசை எடுத்து விடும் என தெரிகிறது. ஆனால் ஸ்வீட் ஹார்ட் தடுமாறிவிட்டது.

Trending News