ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

விஜயாவை மண்ணைக் கவ்வ வைத்த மீனா, முடிவுக்கு வரும் ரோகிணியின் ட்ராமா.. கல்யாணத்தில் முத்துவிடம் சிக்கிய மாமா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிந்தாமணி மீனாவை ஏமாற்றி பிசினஸில் இருந்து ஓட ஓட விரட்டணும் என்று நினைத்தார். அதற்காக சதி செய்து மீனாவை சிக்க வைத்தார். இதனால் துவண்டு போன மீனாவை பார்த்து விஜயா சந்தோஷப்பட்டு மீனாவின் தோல்வியை குடும்பத்துடன் கொண்டாடினார். ஆனால் மீனாவுக்கு அண்ணாமலை கொடுத்த ஒரு ஐடியாவின் மூலம் வெற்றி கிடைத்து விட்டது.

அந்த வகையில் முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ஏமாற்றிய சிந்தாமணியை அவருடைய ரூட்டிலேயே போய் மீனா சிக்க வைத்து விட்டார். கடைசியில் ஏமாந்த பணத்தையும் சிந்தாமணி இடமிருந்து வாங்கிவிட்டு வட்டி இல்லாமல் கடன் கொடுத்தவரிடம் திரும்ப போய் அந்த பணத்தை கொடுத்து விடுகிறார். அத்துடன் எதற்காக தாமதமானது என்ற காரணத்தையும் பணம் கொடுத்தவரிடம் சொல்கிறார்.

அப்படி சொல்லிய பொழுது சிந்தாமணி பற்றியும் சொல்லுகிறார். உடனே அவரும் அதிர்ச்சியாகி விடுகிறார். ஏனென்றால் சிந்தாமணியின் வீட்டுக்காரர் தான் மீனாவுக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்தவர். சிந்தாமணி பேராசை பிடித்து அலைகிறார், இன்னொரு பக்கம் இவருடைய வீட்டுக்காரர் நியாயமாக வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மீனா, முத்துவிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே முத்து வீட்டிற்கு வந்து மீனா பட்ட கஷ்டத்தையும் சிக்கல்களையும் சொல்லி அதிலிருந்து மீண்டு தற்போது வெற்றி பெற்று இருக்கிறார் என்று மாலை போட்டு பாராட்டி விட்டார். உடனே மனோஜ், இதுதான் படிக்காமல் இருந்ததற்கான காரணம். ஒழுங்காக படித்திருந்தால் அந்த அக்ரீமெண்டில் என்ன இருக்கு என்று தெரிந்து கொண்டு அதன்பின் கையெழுத்து போட்டு இருப்பாள்.

இதெல்லாம் படிக்காமல் முட்டாளாக இருந்ததனால் வந்த பிரச்சனை என்று சொல்கிறார். உடனே ரோகினியும், மீனாவை ஏளனமாக பார்க்கிறார். அதற்கு முத்து கொடுத்த பதிலடி என்னவென்றால் நீ படித்து மேதாவியாக இருக்க போய் தான் 30 லட்சம் ரூபாயை ஏமாந்து போய் இருக்கிறாய் என்று சொல்லி ரோகிணி மற்றும் மனோஜை அசிங்கப்படுத்தி விட்டார். இந்த அசிங்கத்தை தாங்க முடியாத ரோகினி, மனோஜிடம் நமக்கு தேவையில்லாத விஷயத்தை நாம் பேச வேண்டாம் என்று வாயை மூட சொல்லி விடுகிறார்.

விஜயாவும் எப்படியாவது மீனாவை தோற்கடித்து வீட்டில் முடக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுக்கிறார். ஆனால் விஜயாவை மண்ணைக் கவ்வ வைக்கும் அளவிற்கு தொடர்ந்து மீனா ஜெயித்துக் கொண்டே வருகிறார். அடுத்ததாக பரசுராமன் மகள் கல்யாண விஷயம் வந்துவிட்டது. இதில் ரோகினி மணப்பெண்ணுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார். மீனா டெக்கரேஷன் வேலைகளை பார்க்கிறார்.

அதே மாதிரி ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி சமையல் வேலைகளை பார்த்து வருகிறார். அப்பொழுது முத்து, மணியை பார்த்து விடுகிறார். உடனே அண்ணாமலையை கூட்டிட்டு வந்து ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த மணியை காட்டி கையும் களவுமாக பிடித்து விடுகிறார். அந்த வகையில் இத்தனை நாளாக இழுத்துக் கொண்டு இருந்த ரோகிணியின் மலேசிய ட்ராமா முடிவுக்கு வரப்போகிறது.

Trending News