ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே அசத்திய விஷ்ணு விஷால்

Vishnu Vishal: முண்டாசுபட்டி, ராட்சசன் ஆகிய படங்கள் விஷ்ணு விஷாலுக்கு பெரும் அடையாளமாக இருக்கிறது. அதிலும் ராட்சசன் இப்போது பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கும்.

அதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜூ இணைந்துள்ளார். இதற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே அசத்திய விஷ்ணு விஷால்

பெயரில் இருக்கும் வித்தியாசத்தை போலவே போஸ்டரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அதில் ஹீரோ ஹீரோயின் இருவரும் எதிரும் புதிரும் ஆக மேகத்தில் அமர்ந்திருப்பது போல் உள்ளது.

அது மட்டும் இன்றி ஏதோ ஒரு மலைப்பிரதேசத்தில் தான் கதை நகரும் என தெரிகிறது. பொதுவாக இந்த மாதிரி இடங்களில் கதைக்களம் என்றால் ஒன்று ஃபீல் குட் மூவியாக இருக்கும்.

இல்லை என்றால் ஹாரர், திரில்லர் வகையை சேர்ந்ததாக இருக்கும். இதில் இப்படம் நிச்சயம் புதுவித மேஜிக்காக இருக்கும் என தெரிகிறது.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே போல் ராட்சசன் படம் மாதிரியே மிரட்டலாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News