ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஆர் ரகுமான்.. அப்போலோ வெளியிட்ட அறிக்கை

AR Rahman: இசைப்புயல் ஏஆர் ரகுமான் நேற்றைய தினம் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. முதலமைச்சர் ஸ்டாலினும் எக்ஸ் தளத்தில் ஏ ஆர் ரகுமான் உடல் நலம் குறித்து பதிவிட்டு இருந்தார். அதோடு மருத்துவமனையையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

இந்த சூழலில் அப்போலோ மருத்துவமனை ஏ ஆர் ரகுமானின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது நீரிழப்பு அறிகுறி இருந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்கு பின்பு ஏஆர் ரகுமான் வீடு திரும்பி உள்ளதாக கூறியிருக்கிறார்.

ஏஆர் ரகுமான் உடல்நலக் குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

ar-rahman
ar-rahman

மேலும் ஏ ஆர் ரகுமான் இப்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் பிறகு தான் இப்போது அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

மணிரத்தினத்தின் ரோஜா படம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமான் எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். அதுவும் ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அதோடு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் மெய்சிலிர்க்கும்படி இசையமைத்திருந்தார். தொடர்ந்து ரசிகர்களின் செவிக்கு விருந்தாக அவரது இசை இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும்.

Trending News