செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ரோகினிக்கு மாமா வைக்கும் ஆப்பு, ஹீரோயிசம் காட்டப் போகும் முத்து.. அண்ணாமலைக்கு தெரியவரும் உண்மை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சிந்தாமணி கார் டிரைவிங் படிப்பதற்காக முத்துவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் இது மீனா வீடு முத்துவின் கணவர் என்று எந்த விவரமும் தெரியாமலேயே முத்து வீட்டு வாசலில் முத்துவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு வெளியே வந்த முத்து மீனாவை பார்த்ததும் சிந்தாமணி வழக்கம்போல் சண்டை போடுகிறார்.

ஆனால் முத்து கொஞ்சம் கூட கோபப்படாமல் சிந்தாமணி செய்த அநியாயத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நோஸ்கட் பண்ணி விடுகிறார். உடனே சிந்தாமணி கோபப்பட்டு போய்விடுகிறார். அடுத்ததாக ரோகிணி மற்றும் வித்யா இரண்டு பேரும் ஹோட்டலில் சாப்பிட போகிறார்கள். அப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் மனோஜ்க்கும் முத்துவுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் முத்து கோவப்பட்டு கத்தியை தூக்கின விஷயத்தையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கே ரோகிணி மற்றும் மனோஜிடமிருந்து 30 லட்சம் ரூபாயை ஏமாற்றிய கதிர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். உடனே ரோகிணி, கதிரை பார்த்து விடுகிறார். பார்த்ததும் சட்டையை பிடித்து பணத்தை கேட்டு பிரச்சினை பண்ணுகிறார். ஆனால் கதிர், ரோகினியை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து போய் விடுகிறார். ரோகிணியும் எப்படியாவது கதிரை பிடிக்க வேண்டும் என்று துரத்திக் கொண்டு போகிறார்.

ஆனால் கதிர், ரோகினி கண்ணில் மண்ணைத் துவிக்கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். பிறகு நடந்த விஷயத்தை வீட்டில் வந்து மனோஜிடம் சொல்கிறார். அதற்கு மனோஜ், கதிர் அப்படி என்றால் இங்கேதான் சகஜமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். முத்துவிடம் சொன்னால் அவன் டிரைவர் என்பதால் நாலு இடத்துக்கு போகும் பொழுது நிச்சயம் கதிர் கண்ணில் சிக்குவான். அப்பொழுது ஈசியாக பிடித்து விடலாம் என்று சொல்கிறார்.

ஆனால் ரோகிணி, முத்து கண்டுபிடித்தால் இதை வைத்து ஓவராக பேசிக் கொண்டே இருப்பான். பிறகு பணமும் நம்ம கைக்கு வராது, அதனால் நாமே தேடிக் கொள்ளலாம் என்று ரோகிணி சொல்கிறார். உடனே மனோஜ் அதுவும் சரிதான் அப்படி என்றால் சாமியாரிடம் போய் கேட்கலாம், பார்வதி அத்தைக்கு அந்த மாதிரி நிறைய விஷயம் தெரியும் அவர்களுக்கு போன் பண்ணி கேளு என்று சொல்கிறார். ரோகிணி, பார்வதிக்கு போன் பண்ணி வெற்றிலையில் மை போட்டு பார்ப்பவரை வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறார்.

அவரைப் பார்க்கும் பொழுது பணத்துக்காக ஏமாற்றுபவர் போல தான் தெரிகிறது. ஆனாலும் வீட்டில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக வெற்றிலையில் மை போட்டு மக்கு மனோஜை ஏமாற்றிக் கொண்டு வருகிறார். இதையெல்லாம் முத்து மீனா ரவி சுருதி அனைவரும் வேடிக்கை பார்த்து நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். அடுத்ததாக பரசுராமன் மகள் கல்யாணம் விசேஷங்கள் வந்துவிட்டது. அதற்கு மணப்பெண்ணுக்கு அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார் ரோகினி.

அப்பொழுது அங்கே எல்லா வேலையும் கசாப்பு கடை மணி செய்து கொண்டிருக்கிறார். அப்படி செய்து கொண்டிருக்கும் பொழுது முத்து அவரைப் பார்த்து விடுகிறார். உடனே முத்து, அண்ணாமலையை கூட்டிட்டு வந்து காட்டுகிறார். அண்ணாமலை மற்றும் முத்துவும் மணியை மடக்கி எல்லா விஷயத்தையும் விவரமாக கேட்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இரண்டு பேருக்கும் ரோகினி செய்த தில்லாலங்கடி வேலை தெரியப்போகிறது. இதன் பிறகு தான் முத்து, ரோகிணிக்கு தரமான பதிலடி கொடுக்கப் போகிறார்.

Advertisement Amazon Prime Banner

Trending News