Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செல்வியின் மகன் ஆகாஷை காதலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஈஸ்வரி உடனடியாக இனியாவிற்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். ஏனென்றால் எல்லோருக்கும் தெரியாமல் ஆகாஷ் இடம் பேசி பழகிய இனிய திடீரென்று ஆகாஷை கல்யாணம் பண்ணி விடுவாளோ என்ற பயம் ஈஸ்வரிக்கு வந்துவிட்டது.
அதனால் உடனடியாக இனியாவிற்கு கல்யாணத்தை பண்ண வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லாமல் சொந்தக்காரங்க குடும்பத்தை வரவழைத்து விட்டார். கோபிக்கு மட்டும் தெரிந்ததால் கோபி ஈஸ்வரியுடன் கூட்டணி போட்டு எல்லாத்துக்கும் சரி என்று சொல்லி விடுகிறார். பிறகு ஈஸ்வரி இனியவை நல்ல டிரஸ் போட்டுட்டு வர சொல்கிறார்.
ஏன் எதற்கு என்று தெரியாமல் இனியாவும் நல்ல டிரஸ் போட்டு அழகாக ரெடி பண்ணி கீழே வருகிறார். அந்த சமயத்தில் மாப்பிள்ளை வீட்டார்களும் வந்து விடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்தவுடன் அங்கு இருப்பவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. இனியவை பொண்ணு பார்க்க தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட பாக்கியம் தனியாக ஈஸ்வரியை கூப்பிட்டு கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி இப்ப எதுவும் பேசிக்கொள்ள வேண்டாம் அவங்க போனதுக்கு அப்புறம் எதுனாலும் கேளு என்று சொல்லி விடுகிறார். உடனே அவர்களும் இனியவை பார்த்து பிடித்து போய்விட்டது நிச்சயதார்த்தத்தை பண்ணிவிடலாம் என்று சொல்லிவிடுகிறார்கள். அதன் பிறகு பாக்கியா, ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார். ஆனால் ஈஸ்வரி உன்னுடைய முடிவு எல்லாமே தவறாக இருக்கிறது. அதனால் இனியா விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
கோபியும் ஈஸ்வரிக்கு தான் சப்போட்டாக இருக்கிறார் என்பதால் பாக்கியா சொல்வது எதுவும் எடுபடவில்லை. ஆனாலும் இனியா இந்த விஷயத்தை சரியாக டீல் பண்ணும் விதமாக ஈஸ்வரியின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று போலீஸ் கன்ட்ரோலுக்கு போன் பண்ணி என்னுடைய பாட்டியும் அப்பாவும் வற்புறுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறார்கள் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.
அதன்படி இனியா எந்த பிரச்சனையும் பண்ணாமல் மறுபடியும் கிளம்பி வருகிறார். ஆனால் அந்த சமயத்தில் போலீஸ் வந்து ஈஸ்வரி மற்றும் கோபியின் அராஜகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்கள். மக்கு மாதிரி எல்லா விஷயத்திலும் ஏமாந்திருக்கும் பாக்கிய மாதிரி இல்லாமல் இனியா புத்திசாலித்தனமாக முடிவு எடுத்திருப்பது பாக்கியவை ஏமாற்ற நினைத்தவர்களுக்கு பதிலடியாக தான் இருக்கும்.