Rajinikanth: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. அது தொடர்பான வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ரஜினியின் காட்சிகள் முடிந்த நிலையில் அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் பிஸியாகி விட்டார். அதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படி இடைவேளை இல்லாமல் நடித்து வருகிறார் ரஜினி. அதில் கூலி வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. ஆனால் இறுதி கட்டப் பணிகள் முடிய சில மாதங்கள் ஆகும்.
ஸ்பெஷல் நாளை குறி வைக்கும் தலைவர்
அதேபோல் ஸ்பெஷல் நாளில் தான் படத்தை வெளியிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறது. அதன்படி கூலி இந்த வருட ஆயுத பூஜை அல்லது தீபாவளியை குறிவைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதேபோல் ஜெயிலர் 2 அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே நாளில் தான் விஜய்யின் ஜனநாயகன் படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஆக இரண்டு படங்களுக்கும் சரியான போட்டியாக தான் இருக்கும். இதில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் விஜய்யின் கடைசி படம் தலைவருடன் மோதினால் அது தரமான சம்பவமாக இருக்கும்.