Lyca Productions: அகலக் கால் வச்சா மொத்தமா சறுக்கி விடும் என்பதற்கு லைகா மிகப்பெரிய உதாரணம் ஆகி விட்டது. லைகா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படம் தான் பெரிய தோல்வி என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உண்மையில் கடந்த 5 வருடங்களாகவே லைகா தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. லைகா சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்து கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
விபூதி அடிச்ச டாப் ஹீரோக்கள்
பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து பெரிய நிறுவனமாக வளர நினைத்தது.
ஆனால் நடிகர்கள், பட்ஜெட் என்பதை தாண்டி கதை நன்றாக இருந்தால் தான் ரசிகர்களிடையே செல்லுபடியாகும் என்பதை உணராமல் போய்விட்டது.
தொடர் தோல்விகளால் லைகா தயாரிப்பிலிருந்து விலகி கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
மூழ்கி கொண்டிருக்கும் கப்பலில் கரை சேர இப்போது பயணித்து கொண்டிருப்பது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தான்.
பொருளாதார சிக்கலில் லைகா நிறுவனம் சிக்கி கொண்டிருப்பதால் தான் ஜேசன் சஞ்சய் இயக்கம் பட வேலைகள் இன்னும் தொடங்காமல் இருக்கிறதாம்.
கடைசியில் டாப் ஹீரோக்கள் மொத்தமாய் சேர்ந்து லைகாவுக்கு விபூதி அடித்து, கடையை சாத்த வைத்து விட்டார்கள் என்று சொல்லலாம்.