IPL Memes: 2025 ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது.
இதனால் அடுத்து வரும் இரண்டு மாதங்கள் சோசியல் மீடியாவே பரபரப்பாக இருக்கும். அதற்கு இப்போதே நெட்டிசன்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விலை மட்டுமே 700 முதல் 7500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அது பற்றிய மீம்ஸ் கூட இப்போது வைரல் ஆகி வருகிறது. அதேபோல் இல்லத்தரசிகள் ஒரு பக்கம் ஐபிஎல் போட்டி தொடங்கப் போவதை நினைத்து கலக்கத்தில் இருக்கின்றனர்.
ஏனென்றால் இனிமேல் சீரியலை ஒழுங்காக பார்க்க முடியாத அல்லவா. தொலைக்காட்சி தொடர்கள் மறுஒளிபரப்பு செய்தால் கூட பெண்மணிகள் வெறித்தனமாக அதையும் பார்ப்பார்கள்.
அப்படி இருப்பவர்களுக்கு ஐபிஎல் விளையாட்டு தொந்தரவாக தான் இருக்கும். இப்படியாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.