எதிர்நீச்சல் 2 சீரியலில் அறிவுக்கரசி செய்த வினை, ஆக்ரோஷமான நந்தினி.. தர்ஷனை காலி பண்ண போகும் பார்கவி

ethirneechal 2 (8)
ethirneechal 2 (8)

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், சுயமாக முடிவெடுத்து சொந்தக்காலில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த குணசேகரன் வீட்டு மருமகள் தற்போது தனியாக வந்து விட்டார்கள். ஆனாலும் இதில் சுயமான முடிவு என்பது எங்குமே இல்லை. குணசேகரன் வீட்டில் இருக்கும் பொழுது குணசேகரன் என்ன சொன்னாரோ அதை கேட்டுக்கொண்டு தான் ஈஸ்வரி ரேணுகா நந்தினி இருந்தார்கள்.

ஆனால் தற்போது ஜனனி என்ன முடிவு சொல்கிறாரோ அதை தான் மற்ற மூன்று பேரும் கேட்கும் படி இருக்கிறார்கள். கடைசி வரை யாராவது ஒரு சொல்லை கேட்டுக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறார்கள். சக்தி சொன்னபடி ஜனனி சக்திக்கு குழந்தை இல்லை, ஈஸ்வரியை பொறுத்தவரை தர்ஷன் கை மீறி போய்விட்டான். தர்ஷினி வளர்ந்துட்டாள், இனி யாரு என்ன சொன்னாலும் அவங்களையே மடக்கும் அளவிற்கு புத்திசாலியானவர்.

அதனால் ஈஸ்வரிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் நடுவில் ஜனனி பேச்சைக் கேட்டு மாட்டிக்கொண்டு முழிப்பது ரேணுகா மற்றும் நந்தினி தான். அதிலும் தாரா சின்ன வயசு பொண்ணு என்பதால் நந்தினி இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் தெரிந்தும் நந்தினி ஏன் இவங்க கூட இருந்து கொண்டு மகளை தண்டிக்க வேண்டும். அட்லீஸ்ட் தாராவையாவது கூட கூட்டிட்டு வந்திருக்க வேண்டும்.

இல்லை என்றால் தர்ஷனுடைய நிலைமை தான் தாராவுக்கும் ஆகும். அதாவது தர்ஷன் ரெண்டு கிட்ட நிலைமையில் இருக்கும் பொழுது ஈஸ்வரி, குணசேகரன் செய்த அட்டூழியத்தை தாங்க முடியாமல் தனியாக போய்விட்டார். இதனால் அப்பாவும் இல்லாமல் அம்மாவும் இல்லாமல் தர்ஷன் புத்தி கேட்டு போய்விட்டார். கொஞ்சம் கூட மாற்ற முடியாது என்பதற்கு ஏற்ப தர்ஷன் நயவஞ்சகராக மாறிவிட்டார்.

தற்போது தர்ஷன் மாதிரியே ஐஸ்வர்யா மற்றும் தாரா குணசேகரன் வீட்டில் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்வர்யா தாரா மனசை மாற்றும் விதமாக குணசேகரன், பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைத்து வருகிறார். இன்னும் இவங்க இரண்டு பேரும் என்ன பிரச்சனை செய்யப் போகிறார்கள், இதற்கு பேசாமல் ரேணுகா நந்தினி பிள்ளைகளை அவங்களுடைய கூட்டிட்டு வந்திருக்கலாம்.

அத்துடன் அறிவுகரசி, குணசேகரை விட மோசமானவள் என்பதற்கு ஏற்ற மாதிரி நான்கு பெண்களையும் பழிவாங்க வேண்டும் என்பதற்காக நந்தினியை முதற்கட்டமாக பழிவாங்கி விட்டார். நந்தினி பிசினஸை முடக்கி விட்டு ஈஸ்வரியின் வேலைக்கு வேட்டு வைத்து விட்டார். அடுத்து ரேணுகா மற்றும் ஜனனிக்கும் ஆப்பு வைக்கும் விதமாக தயாராகி விட்டார்.

இதனால் நொந்து போன நந்தினி, அறிவுக்கரசி செய்த வினையால் கதிர் மீது இருக்கும் கோபத்தை காட்டும் விதமாக தாலியை கழட்டி அதை அடகு வைத்து வீட்டு வாடகை கொடுக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டார். அடுத்ததாக பார்க்கவி கோர்ட்டுக்கு வந்திருக்கிறேன் என்று ஜனனிக்கு போன் பண்ணி சொல்கிறார். அந்த வகையில் ஜனனியையும் அங்கே வர சொல்லிவிட்டார். தர்ஷனுக்கு கோர்ட் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று துணிந்த பார்க்கவி அடுத்து செய்ய போகும் ஒவ்வொரு விஷயத்திலும் தர்ஷன் காலியாக போகிறார்.

Advertisement Amazon Prime Banner