
Ajith: விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களை செதுக்கியவர்தான் பாலா. ஒரு நடிகரிடம் எவ்வாறு திறமையான நடிப்பை வாங்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவராக இருந்து வருகிறார்.
அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை எடுத்திருந்தார். இந்நிலையில் ஆர்யா நடிப்பில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அதன் பிறகு அஜித் மற்றும் பாலா இடையே பெரிய பிரச்சனை ஆகி இந்த படத்தில் இருந்து அஜித் விலகி விட்டார். இவர்களுக்குள் இடையே என்ன சண்டை நடந்தது என பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தற்போது வரை இதைப்பற்றி நிறைய செய்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. இது குறித்து பாலா மற்றும் அஜித் இருவருமே வெளிப்படையாக ஊடகங்களில் எதுவும் சொல்லவில்லை.
நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்காத காரணத்தை கூறிய பாலா
முதல்முறையாக பாலா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அஜித்தும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும்னு தோணுச்சு. இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியா பொருந்துவாருனு நினைச்சேன்.
பொருந்த மாட்டாருன்னு இல்ல பொருந்த வைக்கிறதுதான் என்னுடைய வேலை. ஆனா அஜித்தோட படம் பண்ணனும்னு ஆசை கடைசி வர இல்லாம போச்சு.
மேலும் என்னுடைய படத்துல இதை பண்ணுங்க, அப்படி பண்ணுங்க இப்படி பண்ணுங்கன்னு சொன்னா எனக்கு பிடிக்காது. என்னோட போக்குல என்ன விட்டுரனும். ஆனா அவர் அப்படி செய்வாரான எனக்கு சந்தேகம்.
அதனால் தான் நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று பாலா கூறியிருக்கிறார். பல வருடமாக உலாவிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு பாலா இப்போது தனது பதில் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார்.