
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தாராவிற்கு அம்மா பாசம் கிடைக்காமல் ரொம்பவே ஏங்கிப் போயிருக்கிறார். அதனால் நந்தினிக்கு போன் பண்ணி பார்த்து பேசுவதற்கு கூப்பிடுகிறார். உடனே நந்தினியும் எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம் பிள்ளைகளை நம்முடன் அழைத்து வரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.
அடுத்ததாக பிள்ளைகளை வைத்து மருமகளுக்கு செக் வைக்கலாம் என்று முடிவு பண்ணிய குணசேகரன், தாரா ஐஸ்வர்யாவை கூப்பிட்டு பாசமலையை பொழிந்து ஒரு செண்டிமெண்ட் ட்ராமாவை போடுகிறார். இந்த ட்ராமாவை சகிக்க முடியாத தாரா டியூஷனுக்கு போகணும் என்று சொல்கிறார். ஆனால் குணசேகரன், ஞானத்தை கூட்டிட்டு டியூஷனில் விட்டு திரும்பி கூட்டிட்டு வரவேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.
இருந்தாலும் வேறு வழியில்லாமல் தாரா மற்றும் ஐஸ்வர்யா டியூஷனுக்கு கிளம்பி விடுகிறார்கள். இந்த விஷயத்தை தர்ஷினி மூலம் நந்தினி தெரிந்து கொள்கிறார். உடனே டியூஷனுக்கு போயி பாசங்களை பார்த்து பேசி கையோட கூட்டிட்டு வந்தரலாம் என்று முடிவு பண்ணிய ரேணுகா மற்றும் நந்தினி, கூடவே ஈஸ்வரியும் கூட்டிட்டு போய் விடுகிறார். அப்பொழுது ஜனனிக்கு பார்கவி போன் பண்ணி கோர்ட்டுக்கு வர சொல்கிறார்.
ஜனனியும் பார்க்கவியும் கோர்ட்டில் ஜட்ஜை சந்தித்து பேசிய பொழுது தர்ஷன் விவாகரத்தை விசாரிக்க சொல்லி போலீஸ் இடம் ஏற்கனவே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த போலீஸ் அறிவுக்கரசியின் கையாளு என்பதால் எதையும் விசாரிக்கவில்லை. உடனே ஜட்ஜ் இந்த கேசை பற்றி விசாரிப்பதற்கு புதுசாக ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
அந்த வகையில் ஜனனி மற்றும் பார்க்கவியுடன் சேர்ந்து குணசேகரன் வீட்டிற்கு சென்று தர்ஷனை விசாரிப்பதற்காக மாஸ் என்ட்ரி கொடுத்து குற்றவை வருகிறார். இவர் வந்த பிறகு தான் எதிர்நீச்சல் பழைய பாமுக்கு வந்திருக்கிறது என்பதற்கு ஏற்ற மாதிரி ஒரு பீல் உண்டாகிவிட்டது. அத்துடன் ஜனனி பார்கவி மற்றும் குற்றவை, குணசேகரன் வீட்டிற்கு போகிறார்கள். அங்கே தர்ஷன் அன்புக்கரசி கல்யாண விஷயம் பேசுவதற்காக அறிவுகரசி வந்து இருக்கிறார்.
அப்பொழுது குணசேகரன் வீட்டிற்கு போன குற்றவை தர்ஷனை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகிறார். ஆனால் கதிர், வழக்கம்போல் ஓவராக குதிக்க ஆரம்பித்து விட்டார். உடனே குற்றவை தேவையில்லாமல் உன் தெனாவட்டை என்னிடம் காட்டாதே. உங்க அண்ணன் பரோலில் தான் வந்திருக்கிறார், நீ ஏதாவது பிரச்சினை பண்ணி அது உங்க அண்ணன் நிரந்தரமாக ஜெயிலுக்கு போவதற்கு காரணமாகிவிடும் ஒழுங்காக நடந்து கொள் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் அறிவுக்கரசி, பார்கவி மற்றும் அவருடைய அப்பாவை தவறாக பேசுகிறார். இதை பார்த்த குற்றவை அறிவுகரசியின் கொட்டத்தை அடக்கும் விதமாக அறிவுகரசியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு பதிலடி கொடுத்து விடுகிறார். அந்த வகையில் இனி குற்றவையிடம் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு ஏற்ப தர்ஷன் விசாரணைக்காக போலீசுடன் ஜெயிலுக்கு போகப் போகிறார். ஆள் பலமும் பணம் பலமும் இருக்கிறது என்ற தெனாவட்டில் ஓவராக குதித்த தர்ஷனுக்கு, ஜனனி பார்க்கவி சேர்ந்து சரியான ஆப்பு வைத்து விட்டார்கள்.
அடுத்ததாக பிள்ளைகளையும் தன்னுடனே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணிய நந்தினி மற்றும் ரேணுகா டியூஷனுக்கு போன தாரா மற்றும் ஐஸ்வர்யாவை பார்த்து பேசுகிறார்கள். அங்கே ஞானம் வந்து பிரச்சினையாகி பிள்ளைகளை திரும்ப குணசேகரன் வீட்டிற்கு ஞானம் கூட்டிட்டு போய்விடுகிறார். இதனை அடுத்து சட்டப்படி பிள்ளைகளை தன்னுடன் வைத்துக் கொள்வதற்கு என்ன பண்ண வேண்டும் என்று முடிவு பண்ணி பிள்ளைகளை கூட்டிட்டு வந்து விடுவார்கள்.