
Sun Tv Serial: சன் டிவியில் உள்ள சீரியல்கள் பொருத்தவரை எது டாப்பில் இருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங் படி தான் கணிக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு பிடிக்காமல் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் டிஆர்பி ரேட்டிங்கில் அந்த சீரியல் அதிக புள்ளிகளை பெற்றால் அந்த சீரியலை முடிக்கவே மாட்டார்கள். அதற்கு பதிலாக புதுசாக வந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டல் அடித்து விட்டால் அதை உடனடியாக முடித்து விடுவார்கள்.
அப்படித்தான் தற்போது ஒரு புது சீரியலை தூக்குவதற்கு சன் டிவி முடிவு பண்ணி விட்டார்கள். அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதம் புதுசாக வந்த ரஞ்சனி சீரியல் இரவு நேரத்தில் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகியது. நட்புக்கு இலக்கணமாக இருக்கும் இந்த சீரியலின் கதை மக்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கிலும் ஓரளவுக்கு புள்ளிகளை பெற்றது.
அதன் பிறகு இந்த சீரியலை 10மணிக்கு மாற்றியதால் கொஞ்சம் அடி வாங்கிவிட்டது. அதனால் இந்த சீரியலை தற்போது முடித்து விடலாம் என்று சன் டிவி முடிவு பண்ணி விட்டார்கள். ஆரம்பித்து நான்கு மாதத்திலேயே பிரேம் டைமிங் போய்க்கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த சீரியலின் கதைக்கும் மக்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் புதுசாக வரிசையில் நான்கு சீரியல்கள் காத்துக்கொண்டிருப்பதால் வேறு வழி இல்லாமல் இந்த சீரியலை தூக்குவதற்கு தயாராகி விட்டார்கள். அந்த வகையில் ஆடுகளம் என்ற புது சீரியல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிய நிலையில் அதற்கான நேரம் கிடைக்காமல் இருப்பதால் இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் வேறு வழி இல்லாமல் ரஞ்சனி சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆடுகளம் சீரியல் வரப்போகிறது. ஆனால் ஆடுகளம் சீரியலுக்கு பதிலாக கயல் சீரியலை முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கயல் சீரியல் எப்படியோ தப்பித்து விட்டது. தேவிக்கு தற்போது குழந்தை பிறந்து விக்னேஷ் மற்றும் மாமியாரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தேவியின் காட்சிகள் அனைத்தும் மக்களை அதிகமாக கவர்ந்து விட்டது.
அதனால் இப்போதைக்கு கயல் சீரியல் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆனாலும் இன்னும் மூன்று புது சீரியல்கள் வரிசையில் நிற்கிறது. அந்த வகையில் ஆடுகளம் சீரியலுக்கு அடுத்ததாக பூவே செம்பூவே, செல்லமே மற்றும் பராசக்தி சீரியல் அடுத்தடுத்து வரப்போகிறது.