
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் கதிரை கண்டுபிடிப்பதற்காக பார்வதிக்கு போன் பண்ணி வெற்றிலையில் மை தடவி பார்க்கும் நபரை வீட்டிற்கு கூட்டிட்டு வரச் சொன்னார். பார்வதியும் அந்த நபரை வீட்டிற்கு கூட்டிட்டு போன நிலையில் அவர் பணத்துக்காக தான் மனோஜை ஏமாற்றுகிறார் என்று முத்து சுருதி கண்டுபிடித்து விட்டார்கள்.
அதனால் நக்கல் அடித்து பேசிய பொழுது துண்ட காணும் துணிய காணும் என்று அந்த நபர் ஓடிப் போய்விட்டார். கடைசி வரை இந்த மனோஜ் திருந்தவே மாட்டார் புத்தியும் வராது என்ற சொல்வதற்கு ஏற்ப மனோஜின் செயல்கள் இருக்கிறது. அதிலும் கூடவே இருந்து ரோகினி எல்லாத்துக்கும் ஒத்து ஊதி வருகிறார். அடுத்ததாக மனோஜின் பிறந்தநாளுக்கு ரோகிணி சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக பல கிப்ட்டுகளை அள்ளி விடுகிறார்.
இதெல்லாம் எதிர்பார்க்காத மனோஜ், ரோகிணியின் காதல் மழையில் நனைந்து மொத்தமாக உருகி விடுகிறார். பிறகு எல்லோரும் மனோஜ்க்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். அடுத்து கேக் வெட்டி ரோகிணிக்கு ஊட்டி விட்டு ரொமான்ஸ் பண்ணுகிறார். அந்த வகையில் மனோஜை பார்க்கும் பொழுது ரோகிணி பற்றிய ரகசியங்கள் தெரிந்தால் கூட ரோகிணி விட்டு போக மாட்டார் போல அந்த அளவுக்கு ரோகினி, மனோஜ் மனசில் இடம் பிடித்து விட்டார்.
அத்துடன் மனோஜின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிடித்த சமையல்களை செய்து அசத்த வேண்டும் என்று மீனாவிடம் ஆர்டர் போடும் விதமாக ரோகிணி சமையல் பண்ண சொல்கிறார். மீனாவும் அந்த வீட்டின் அடிமை என்பதால் சரி என்று பணிவிடை பண்ணுவது போல் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். யார் எந்த நிலைமைக்கு வந்தாலும் மீனா கடைசி வரை வீட்டு வேலை மட்டும் பார்த்துக் கொண்டே வருவார்.
இதனை அடுத்து பரசுராமனின் மகள் கல்யாணத்திற்கு குடும்பத்துடன் போய்விடுகிறார்கள். அங்கே செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் அண்ணாமலை பணம் கொடுத்து உதவுகிறார். இதை பார்த்து கடுப்பான விஜயா, ரவிடம் புலம்புகிறார். உடனே ஸ்ருதி, அவருடைய பிரண்டுக்கு அவங்க பணம் கொடுத்தாங்க இதுல உங்களுக்கு என்ன கஷ்டம் என்று சொல்லி விஜயாவின் வாயை அடைத்து விடுகிறார்.
அடுத்ததாக ரோகிணி மீனா மற்றும் சுருதி மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக பேசிக்கொண்டு சந்தோசமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து சந்தோஷப்பட்ட முத்து துள்ளி குதித்து அப்பாவையும் கூட்டிட்டு வந்து காட்ட வேண்டும் என்று அண்ணாமலையை கூட்டிட்டு வந்து காட்டுகிறார். இதனை அடுத்து கசாப்பு கடை மணி முத்து கண்ணில் சிக்க போகிறார். ரோகிணியின் மலேசியா அத்தியாயம் முடியும் நேரம் வந்துவிட்டது.